மயிலிறகை உங்கள் வீட்டில் வைப்பதால் ஏற்படும் அ திர டி மாற்றம் என்னென்ன தெரியுமா!

மயிலிறகை உங்கள் வீட்டில் வைப்பதால் ஏற்படும் அதிரடி மாற்றம் என்னென்ன தெரியுமா இந்து மதத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அர்த்தமும், மகிமையும் உள்ளது. பல கடவுள்கள் மிருகங்களையும், பறவைகளையும் தங்களின் வாகனமாக கொண்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை ஆபத்தான மிருகங்களாக இருக்கும். ஆனால் சில வாகனங்கள் அழகானதாகவும், அதிஷ்டமானதாகவும் இருக்கும்.

அதிர்ஷ்டமான பொருள்கள் எனும்போது அதில் முக்கிய இடம் வகிப்பது மயில் இறகுதான். இந்து மதத்தில் மயிலிறகுக்கென தனி முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில் அது பல கடவுள்களின் வாகனமாகவும், அடையாளமாகவும் இருக்கிறது. அதனால் அதனை வீட்டில் வைப்பது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் மயிலிறகின் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்பதை பார்க்கலாம்.

பாதுகாப்பு
மயில் பாதுகாப்பு மற்றும் கவசத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இது நம்மை மனக்குழப்பங்களில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. இந்து புராணங்களின் படி உங்கள் வீட்டில் மயிலிறகு வைப்பது உங்கள் இல்லத்தை எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.

Loading...

கடவுள்கள்

மயிலிறகுகள் இந்தியாவில் மதிக்கப்படும் அளவிற்கு வேறு எந்த நாட்டிலும் மதிக்கப்படுவதில்லை. தமிழ்க்கடவுள் முருகன், தேவர்களின் அதிபதி இந்திரன் ஆகியோர் மயிலை வாகனமாக பயன்படுத்துகின்றனர். கிருஷ்ணா பரமாத்மா தனது கிரீடத்தில் எப்பொழுதும் மயிலிறகை வைத்திருப்பார். இது அவரின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

அலங்காரம்

அனைத்து விஷேசங்களிலும் அலங்கார பொருட்களில் மயிலிறகு பயன்படுத்தப்படுகிறது. அதன் முக்கிய நோக்கம் பாதுகாப்புதான். ஒட்டுமொத்த ஆசியாவிலும் மயிலிறகு அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்பிற்காக மயிலிறகு பயன்டுத்தப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் மேற்கு நாடுகளில் மயிலிறகு துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்பட்டது.கிரேக்க புராணம்

கிரேக்க புராணத்தில் மயிலிறகு ஹெரா என்னும் கடவுளுடன் தொடர்புடையது. ஹெரா ஆர்கஸ் என்னும் நூறு கண்களை உடைய கடவுளிடம் இருந்து மயிலை உருவாக்கியதாக கிரேக்க புராணங்கள் கூறுகிறது. இது சொர்க்கத்தின் வாசலாகவும், நட்சத்திரத்தின் கண்களாகவும் கருதப்படுகிறது.

இந்து புராணம்

இந்து புராணங்களின் படி மயிலிறகிற்கும், செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கும் தொடர்புள்ளது. இது அதிர்ஷ்டம், செல்வம், இரக்கம் மற்றும் பொறுமையின் அடையாளமாக உருவாக்கப்படுத்தப்படுகிறது. இந்த அனைத்து குணங்களும் வேண்டும் என்பவர்கள் பூஜையறையில் இதனை வைத்து வழிபடலாம்.

புத்த மதம்

உலகின் மிகவும் முக்கியமான மதங்களில் ஒன்று புத்த மதமாகும். புத்த மதத்தில் மயிலிறகிற்கு வெளிப்படைத்தன்மை என்று பொருள். ஏனெனில் அவை தங்கள் வாலை காட்டும்போது அனைத்து இறகுகளையும் விரிக்கிறது.

கிறிஸ்துவம்

கிறிஸ்துவ மதத்தில் மயிலிறகு மறுஜென்மம் மற்றும் அமரத்துவத்தின் அடையாளமாகும். அழியாமை பற்றிய போதனைகள் கிறிஸ்துவ மதத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *