10த்தே செக்கன் இப்படி உட்காருந்திருந்தா, இனி இந்த பிரச்சினையெல்லாம் உங்களுக்கு இல்லை!

நவீன வாழ்க்கை முறை என்கிற பெயரில் கண்ட உணவுகளை சாப்பிடுவதும், உணவின் மீதுள்ள அதீத காதலும், ருசியின் மீதுள்ள ஒரு வித போதையும் தான் எந்த வகை உணவாக இருந்தாலும் நம்மை சாப்பிட தூண்டுகிறது. உணவை சாப்பிடுவது தவறில்லை. ஆனால், கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் அதனால் முதலில் பாதிக்கப்படுவது உங்கள் உடல் தான்.

அதுவும் வயிற்று பகுதிக்கு கீழுள்ள பகுதிகள் அனைத்துமே நிச்சயம் பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் விளைவாக மலச்சிக்கல், செரிமான கோளாறு, அஜீரண கோளாறு போன்ற பாதிப்புகள் உண்டாகிறது. இந்த கோளாறுகளை தடுக்க ஒரு சில வழிகள் உள்ளது. அதுவும் இந்த முன்னோர்களின் முறையை செய்து வந்தாலே போதும். இனி இதனை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மலச்சிக்கல்
இன்றைய கால கட்டத்தில் பலரும் பாதிக்கப்பட்டிருக்கும் ஒன்று தான் இந்த மலச்சிக்கல். கண்ட உணவுகளை சாப்பிடுவதோடு, எந்த ஒரு வேலையே செய்யாமல் ஒரே இடத்தில் இருந்தால் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட கூடும். மலச்சிக்கல் ஏற்பட்டால் நம்மால் வேறு எந்த வேலைகளிலும் கவனம் செலுத்த இயலாது.

முன்னோர்களின் முறை
நம் முன்னோர்கள் மலச்சிக்கலை குணப்படுத்தவும், தடுக்கவும் ஒரு அற்புத வழியை கண்டுபிடித்து வைத்திருந்தனர். இந்த முறையின் மூலம் பலவித உடல் குறைபாடுகளையும் தீர்க்க இயலும். இதை ஆசன முறையினால் சரி செய்து, பிரச்சினை இல்லாத வாழ்வை உங்களுக்கு தர இயலும்.

இந்த ஆசனத்தை வைத்து தான் மலச்சிக்கலை தீர்வுக்கு கொண்டு வர போகிறோம். இதன் பெயரிலே இந்த ஆசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்கிற முறையும் தரப்பட்டுள்ளது. அதாவது, “மாலா” என்றால் “மாலை” என சமஸ்கிருதத்தில் பொருள்படும். எனவே, மாலை போன்ற நிலையில் உட்கார்ந்து இதை செய்ய வேண்டுமாம்.

பயிற்சி முறை
முதலில் காலை நன்றாக விரித்து வைத்து கொள்ளவும். அடுத்து பாதி உட்காரும் நிலைக்கு வர வேண்டும். அதன் பின்னர் கைகளை குவித்து வணக்கம் வைக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல போனால் பாதி உட்கார்ந்து மலம் கழிக்கும் நிலையில் இருந்து கொண்டு இந்த ஆசனத்தை செய்ய வேண்டுமாம்.

எத்தனை முறை
இந்த ஆசனத்தில் 10 நொடிகள் வரை இருக்கவும். அதோடு இந்த ஆசனத்தை ஒரு நாளைக்கு 8 முதல் 10 வரை செய்து வரலாம். ஒவ்வொரு முறை செய்த பின்னரும் மூச்சை நன்றாக இழுத்து வெளியே விடவும். இந்த பயிற்சியினால் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.

எலும்புகளுக்கு
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் கண்டிப்பாக ஏற்படாது. உங்களின் நடு முதுகு மிகவும் பலமாக இருக்கும். மேலும், கழுத்து வலி, இடுப்பு வலி போன்றவற்றால் அவதிப்படுவோருக்கு இது சிறந்த தீர்வாகும்.

செரிமானம்
இந்த ஆசனத்தை செய்து வந்தால் செரிமான கோளாறுகள் நிச்சயம் இருக்காது. அதோடு மலச்சிக்கல் போன்ற ஆசன வாய் பிரச்சினைகளை முற்றிலுமாக குணப்படுத்தவும் தடுக்கவும் இந்த ஆசனம் உதவும். உடலில் சீரான இரத்த ஓட்டத்தையும் இது தரும்.

மூளை திறன்
மூளையின் திறனை அதிகரிக்க இனி மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியதில்லை. மாறாக மலாசனத்தை செய்து வந்தாலே போதும். சுறுசுறுப்பாக இருக்கவும், புத்தி கூர்மை அதிகரிக்கவும் மலாசனம் உதவும்.

தவிர்ப்பீர்!
பலருக்கும் மலசிக்கல், செரிமான கோளாறு, மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட முக்கிய காரணமே தரையில் உட்காராமல் இருப்பது தான்.இதை தவிர்க்க அவ்வப்போது தரையில் உட்கார பழகுங்கள். மேலும், டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதை விட தரையில் உட்கார்ந்து சாப்பிட பழகுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *