12 ம் வகுப்பு கணக்கு வைத்தியார் போல மாறிய வனிதா:நல்லா ட்ரெயின் பண்ணியிருக்கிங்க பிக்பாஸ்!

Spread the love

12 ம் வகுப்பு கணக்கு வைத்தியார் போல மாறிய வனிதா:நல்லா ட்ரெயின் பண்ணியிருக்கிங்க பிக்பாஸ்!பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விருந்தாளியாக மீண்டும் வந்துள்ள வனிதா பாரபட்சமின்றி கிழித்து தொங்கவிட்டு வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வனிதா விஜயகுமார், சின்ன சின்ன விஷயங்களையும் ஊதி பெரிதாக்கினார். இதனால் அவர் இருந்தவரை பிக்பாஸ் வீடு கலவர பூமியாகவே இருந்தது.

வனிதா மட்டும் தான் கத்தி பேச வேண்டும், வேறு யாரும் அவருக்கு எதிராக குரலை உயர்த்தி பேசக்கூடாது. அவர் மட்டும் தான் கருத்து சொல்ல வேண்டும் என்பது போன்ற எழுதப்படாத சட்டங்களை பின்பற்றி வந்தார் வனிதா.

இதனால் எரிச்சலான பார்வையாளர்கள், வனிதாவை முதலில் வெளியேற்ற வேண்டும் என போராட்டம் நடத்தாத குறையாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து இரண்டாவது வாரமே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் வனிதா.

அவர் இருக்கும் வரை அனுப்புங்கள், அனுப்புங்கள் என்ற பார்வையாளர்கள், அவர் போன பிறகு வனிதா அக்காவை அழைத்து வாருங்கள் பிக்பாஸ் என்று கெஞ்ச தொடங்கிவிட்டனர். காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்து விட்டது.

இந்நிலையில் வனிதாவை கெஸ்ட்டாக மீண்டும் அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ். வந்த வனிதா, மொத்த எபிசோடையும் பார்த்துவிட்டு எல்லோரையும் தாளித்து தள்ளுகிறார்.

குறிப்பாக லாஸ்லியாவின் உண்மை முகத்தை வெளியே கொண்டு வரவேண்டும் என்பதிலும் அவரது குட்டை உடைக்க வேண்டும் என்பதிலும் குறியாக உள்ளார். அதேபோல் கவினையும் விளாசியுள்ளார். கவின் குறித்து வனிதா பேசும் பேச்சால் முதல் நாளிளேலே கவினின் முகம் தொங்கி விட்டது

முக்கியமாக வொர்த்தே இல்லை என கவினை பார்த்து வனிதா கூறும் போது கவினின் முகத்தில் ஈயாடவில்லை. சாக்ஷி போய்விட்டார் இனிமே நம்ம ரூட்டு க்ளியர் என்று இருந்த கவினும் லாஸ்லியாவும் வனிதாவின் வருகையால் பேய் அறைந்தது போல் உள்ளனர்.

வனிதாவை விட வனிதா 2.0 வர்ஷன் பக்கா அப்டேட்டுடன் வந்துள்ளார். ட்ரெயின் பண்ணியது போலவே ஹவுஸ்மேட்ஸ்களை டிவிஸ்ட் செய்துள்ளார். முன்பாவது நாமினேஷனுக்கு அஞ்சி கொஞ்சம் அடக்கி வாசித்தார். இப்போது விருந்தாளி வேறு சொல்லவே வேண்டாம்.. எதற்கும் அஞ்சாமல் முழு ஆட்டத்தையும் ஆடிவிட்டுதான் போவார் வனிதா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *