கருப்பை நீர்க்கட்டியால குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா? வெறும் பட்டை போதும் இத சரிபண்ண !

Spread the love

லவங்கப் பட்டை நமது இந்திய சமையலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. சமையலுக்கு வாசனையைத் தந்து உடலுக்கு பல நன்மைகளைப் புரிய உதவும் இந்த லவங்கப்பட்டை பல வித ஊட்டச்சத்துகள் கொண்டது. மேலும் லவங்கப்பட்டை பல்வேறு மருத்துவ நன்மைகள் கொண்ட ஒரு உணவுப் பொருள். இதன் மணம் இதமான உணர்வைத் தரும்.

லவங்கப்பட்டை, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட காரணத்தால், தொற்று பாதிப்பை எதிர்த்துப் போராட உதவுகிறது. கருவுறுதலுக்கான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த சிகிச்சையைத் தருகிறது, மற்றும் இன்னும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இத்தகைய லவங்கப்பட்டையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் காணலாம்.

அல்சைமர் என்பது டிமென்ஷியா என்னும் மனநோயின் ஒரு வடிவமாகும். பெரியவர்களைத் தாக்கும் இந்த அல்சைமர் பாதிப்பால், கவனக் கோளாறு, நினைவு தடுமாற்றம் மற்றும் குணநலனில் பாதிப்பு ஆகியவை உண்டாகும். வயதானவர்களைத் தாக்கும் ஒரு மோசமான நோய் இது.

கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், லவங்கப்பட்டை உட்கொள்வதால் அல்சைமர் பாதிப்பு தடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. லவங்கப்பட்டையில் இருக்கும் கூறு, நரம்பியல் காரணிகள் அதிகரிக்க உதவுகிறது – தற்போது இருக்கும் நரம்பியல் அணுவை செயல்பாட்டுடன் வைத்து, புதிய அணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் அல்சைமர் வளர்ச்சி தாமதிக்கப்படுகிறது.

உலகில் பெருவாரியான மக்கள் பாதிக்கப்படும் ஒரு நோயாக இந்த இடமகல் கருப்பை அகப்படலம் அமைகிறது. இதனை என்டோமெற்றியோசிஸ் என்றும் கூறுவர். இது ஒரு வலி நிறைந்த கோளாறாகும். கருப்பை திசுக்களில் இந்த பாதிப்பு உண்டாகிறது. கருப்பை திசுக்கள் கருப்பைக்குள் வளராமல் கருப்பைக்கு வெளியே வளருவதால் இந்த பாதிப்பு உண்டாகிறது. இடம்பெயர்ந்த கருப்பை திசுக்கள் உடைந்து மாதவிடாய் சுழற்சியின்போது உதிரப்போக்கு ஏற்படுத்துகிறது.

லவங்கப்பட்டையில் சின்னமல்டிஹைடு என்னும் இயற்கையான கூறு உள்ளது. இது ப்ரோஜெஸ்ட்ரோன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இடமகல் கருப்பை அகப்படல பாதிப்பு உள்ள பெரும்பான்மையான பெண்கள் ப்ரோஜெஸ்ட்ரோன் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் லவங்கப்பட்டை இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, அதிக உதிரப்போக்கைக் கட்டுப்படுத்துகிறது.

கருவுறும் பருவத்தில் இருக்கும் பெண்களில் பலரும் பாதிக்கபப்டும் ஒரு பிரச்சனை கருப்பை நீர்க்கட்டிகள். சினைப்பையின் செயல்பாட்டை பாதிக்கும் ஒரு கட்டியாக இது உள்ளது. உலகின் லட்சக்கணக்கான பெண்களை இந்த நிலை பாதிக்கிறது.

நீர்கட்டிகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் இரத்த சர்க்கரை அளவை நிர்வகித்து, இன்சுலின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க லவங்கப்பட்டை உதவுகிறது. லவங்கப்பட்டை உட்கொள்வதால், இன்சுலின் எதிர்ப்பு குறைந்து, மாதவிடாய் சுழற்சி கட்டுப்பட உதவுகிறது.

நம் நாட்டில் உள்ள மக்களை அதிகமாக பாதிக்கும் நோய் இதய நோய். அதிக உடல் செயல்பாடு அற்ற உழைப்பு, வயது முதிர்ச்சி, உடல் பருமன், தவறான உணவுப் பழக்கம் போன்றவை இதய நோய் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன.

இதய நோய் மற்றும் லவங்கப்பட்டை ஆகிய இரண்டிற்கும் உள்ள தொடர்பைப் பற்றி பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. லவங்கப்பட்டை, இதய நோய் வளர்ச்சிக்கான அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. இதய நோய்க்கு முக்கிய காரணிகளான ட்ரை க்ளிசரைடு, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் ஆகியவற்றையும் கட்டுப்பாட்டில் வைக்க லவங்கப்பட்டை உதவுகிறது.

நீரிழிவு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கபட்டால், அது வாழ்நாள் முழுவதும் நம்மை பாதிக்கிறது. உடலில் இரத்த சர்க்கரை அதாவது க்ளுகோஸ் அளவு அதிகமாக இருக்கும் நிலை நீரிழிவு என்று அறியப்படுகிறது. க்ளுகோஸ் என்பது செரிமானத்தின்போது உடலில் உற்பத்தியாகும் ஒரு சர்க்கரை வகையாகும். இந்த க்ளுகோசின் முறையான பயன்பாட்டை பராமரிப்பது இன்சுலின் ஆகும். இந்த சர்க்கரை, அணுக்களில் நுழைந்து ஆற்றலாக மாறுகிறது.

லவங்கப்பட்டை உட்கொள்வதால் இன்சுலின் உணர்வுத்திறன் அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது, இதனால், இன்சுலின் அதிக திறனுடன் அணுக்களுக்கு க்ளுகோசை அனுப்ப முடிகிறது.

லவங்கப்பட்டை அதன் வாசனை மற்றும் சுவைக்கு பெயர்போனது. இந்த உணவுப்பொருள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தன்னிடம் கொண்டுள்ளது. அறிவாற்றல் குறைபாடு, நீரிழிவு, இதய நோய் மற்றும் இன்னும் பல்வேறு நோய்களால் பாதிக்கபட்டவருக்கு இந்த லவங்கப்பட்டை பல நன்மைகள் புரிகிறது. ஆகவே இவ்வளவு நன்மைகள் கொண்ட லவங்கப்பட்டையை நம் உணவில் சேர்த்து அதன் நன்மைகளைப் பெற்றிடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *