உருகி உருகி காதலித்தவர்களா இவர்கள்? கடும் கோபத்தில் அபிராமியை அடிக்க சென்ற முகேன்!

Spread the love

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினத்தில் வனிதா உள்ளே சிறப்பு விருந்தினராக சென்றதால் பிக்பாஸ் வீடு இன்று சண்டையில் இன்னும் அதிகமாகவே களைகட்டுகின்றது என்று கூறலாம்.

அபியிடம் அவரது காதலைக் குறித்து காரசாரமாக பேசிய வனிதா அதன் பின்பு ஒன்றும் தெரியாதது போன்று இருக்கிறார். நேற்றைய தினத்திலிருந்து வனிதா யாரையும் விட்டு வைக்காமல் இந்த வீட்டில் உறவு என்ற வார்த்தைக்கு இடமே இல்லை என்ற அளவிற்கு நடந்துகொள்கிறார்.

வனிதாவின் பேச்சைக் கேட்ட அபிராமி முகேனிடம் சண்டையிடுகிறார். ஒரு கட்டத்தில் இந்த சண்டை ஆக்ரோஷமாக கைகலப்பாக மாறுவது போன்ற ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

முகென் மறைத்த ஒரு விஷயம், அபிராமியிடம் போட்டுடைத்த வனிதா- என்ன வேலை இது!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் வனிதா. 3 வாரங்களுக்கு பிறகு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார், ரசிகர்கள் கண்டிப்பாக டிஆர்பி க்கு ஒரு குறையும் இருக்காது என்கின்றனர்.

வீட்டில் நுழைந்ததில் இருந்து எல்லோருக்கும் வெளியில் என்ன நடக்கிறதோ அதை குத்துமதிப்பாக கூறி வருகிறார். இப்போது அபிராமிக்கு நீ ஏன் முகென் பின் செல்கிறாய், துர்கா யார் என்று உன்னிடம் ஏதாவது கூறினானா என கேள்வி எழுப்புகிறார்.

கண்டிப்பாக ஏதாவது பிரச்சனை வெடிக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *