நீங்கள் பிறந்த கிழமையும்! உங்களின் குணாதிசயங்களும்!

Spread the love

நாம் பிறந்த கிழமையைக் கொண்டு நம் ஒவ்வொருவருக்கும் சில குணாதிசயங்கள் இருக்கும். அவை பிறப்பிலேயே வந்ததாகக் கூறுவார்கள். அது எப்படி பிறக்கும்போதே குணமும் சேர்ந்து வரும் என்று யோசித்துப்பாருங்கள் உங்களுக்குப் புரியும். ஆனால் எண்கணித அடிப்படையில் குறிப்பிட்ட கிழமையில் பிறந்தவர்களுக்கு அந்த கிரகங்களின் குணாதிசயங்கள் கூடவே வரும்.

ஞாயிற்றுக்கிழமை :

இந்நாளில் பிறந்தவர்கள் கடின வேலைகளையும் மிக எளிதாகவும் திறமையாகவும் சிறப்பாகச் செய்து சாதித்து காட்டுவார்கள். தங்களால் முடியாது என்றால் அந்த விஷயத்தில் வாய்விட்டு மாட்டிக் கொள்ளாமல் மௌனம் சாதிப்பார்கள். உற்றார், உறவினர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய தலைமையின்கீழ் பலர் பணிபுரிவார்கள்.

திங்கள்கிழமை :

இந்நாளில் பிறந்தவர்கள் சாந்த குணம் கொண்டவர்களாக இருப்பர். இனிமை, அன்பு, உதவும் உள்ளம், மற்றும் எதிரிகளையும் நண்பர்களாகவே பார்ப்பார்கள். தர்மம் மற்றும் நியாயத்தைக் கடைபிடிப்பவர்கள். சுய தொழில் செய்து வந்தால் அதில் சிறந்து விளங்குவார்கள். குளிர்ச்சியான தேகமுடையவராக இருப்பர்.

செவ்வாய்க்கிழமை :

இந்நாளில் பிறந்தவர்கள் பலரிடம் பலவித யோசனைகளைக் கேட்பார்கள். கடைசியாக தன்னுடைய முடிவு தான் சரி என்று எண்ணுபவர்கள். நல்லவர்களுக்கு நல்லவராகவும் கெட்டவர்களுக்கு கெட்டவராகவும் இருப்பார்கள். அதனாலேயே பலருக்கும் இவர்களைப் பிடிக்காமல் போகும். நியாய தர்மங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்.

புதன்கிழமை :

இந்நாளில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். இயந்திரம், வைத்தியம், ஜோதிடம், ஓவியம், துப்பறியும் கலை ஆகிய துறைகளில் வல்லவர்களாக இருப்பார்கள். ரகசியம் காப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் மனதில் இருப்பதைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். பல துறைகளில் தேர்ச்சி பெற்று உயர் பதவி வகிப்பார்கள்.

வியாழக்கிழமை :

இந்நாளில் பிறந்தவர்கள் நீதி, தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். குறுக்கு வழியில் செல்பவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்துவார்கள். உற்றார், உறவினர்களுக்கு உதவி புரிவார்கள். எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறந்து விளங்குவார்கள்.

வெள்ளிக்கிழமை :

இந்நாளில் பிறந்தவர்கள் பிறக்கும்போதே சமர்த்துப்பிள்ளை என்று பெயர் எடுப்பார்கள். தங்களுடைய பேச்சாலேயே மற்றவர்களைத் தன்வயப்படுத்துவார்கள். தன்னுடைய பேச்சைக் கேட்காதவர்களைப் புறக்கணித்துவிடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் மற்றவர்களின் துணையோடு சிறப்பாக செய்து முடிப்பார்கள். தங்களுடைய துணையோடு அன்பில் மூழ்கியிருப்பார்கள்.

சனிக்கிழமை :

இந்நாளில் பிறந்தவர்கள் பெரும் புத்திசாலிகளாகவும் பொறுமைசாலிகளாகவும் இருப்பார்கள். பார்ப்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கக்கூடியவர்கள். வேலையென்று வந்துவிட்டால் அதை முடித்தே தீர வேண்டும் என்ற உறுதியோடு இருப்பவர்கள். முதியவர்களிடம் மிகுந்த மரியாதையோடு இருப்பார்கள். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *