ஆண்கள் வெறும் வயிற்றில் சோத்துக் கற்றாழை ஜூஸை குடிக்கலாமா! தினமும் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Spread the love

பச்சை தாவரமான சோத்து கற்றாழையின் பயன்கள் பெருமளவில் உள்ளன.

தோலில் ஏற்படும் வெடிப்பு, எரிச்சல், தோல் அலர்ஜி போன்றவற்றிற்கு சோத்து கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.சோத்துக் கற்றாழை சாற்றில், உடலுக்கு தேவையான அதிக அளவிலான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் அடங்கி உள்ளன.

இந்த அளவிற்கு சோத்து கற்றாழை ஆரோக்கியமானதாக உள்ளதால், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் ஜூஸ் தயாரித்து வெறும் வயிற்றில் பருகி பாருங்கள். அதிகமான நன்மைகள் கிடைக்கும்.

கற்றாழை ஜூஸ் தயாரிக்கும் முறை

  • மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லைப் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அந்த பானத்தை காலையில் உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்க வேண்டும்.
  • இந்த அற்புத பானத்தை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • முக்கியமாக உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

நன்மைகள்

உங்களுக்கு செரிமான கோளாறுகள் தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.

மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உடனே விலகும்.

கற்றாழை ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க உதவும்.

எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு, கற்றாழை ஜூஸ் மிகவும் அற்புதமான ஓர் பானம்.

தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடலினுள் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படும்.

ஆண்களுக்கு…

அதுவும் குறிப்பாக அதிகாலையில் உடற்பயிற்ச்சி செய்யும் ஆண்கள் கற்றாலை ஜூஸ் பருகினால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.

ஏனெனில் இந்த சாற்றில் அடங்கி உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துக்கள் போன்றவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. சோத்துக் கற்றாழை சாற்றை தினமும் எடுத்துக் கொண்டால், அது உடலின் வேலைகளை மேம்படுத்தி, உறுப்புகளின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

இவ்வாறாக சோத்துக் கற்றாழை உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த சாற்றில் அதிக அளவிலான சத்துக்கள் அடங்கி உள்ளதால், உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கி, எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *