கமல் முன்பு அ சிங்கப்படுத்திய கஸ்தூரி…. ப ழிக்கு ப ழி வாங்கி ஆசிரியையை அ லறவிட்ட வனிதா!

Spread the love

பிக்பாஸ் இன்றைய தினத்தில் பள்ளிக்கூடமாக காட்சியளிக்கின்றது. இதனால் சற்று மகிழ்ச்சியினைக் காணலாம் என்று பார்வையாளர்கள் எதிர்பார்ப்பில் இருந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தற்போது வெளியாகிய இரண்டாவது ப்ரொமோ காட்சியில் வனிதா டீச்சராக இருக்கும் கஸ்தூரி வைச்சி செய்கின்றார் மிகவும் தெளிவாக புரிந்துள்ளது.

ஆம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதாவை கமல் முன்பு கஸ்தூரி அவமானப்பட வைத்தார். இதனை மனதில் வைத்துக்கொண்டு தனது ஆட்டத்தினை ஆரம்பித்துவிட்டார் போல நம்ம வனிதா.

தர்ஷனை மறைமுகமாக விமர்சித்த கமல்.. நக்கலாக சிரித்த கஸ்தூரி.. என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் கவின் கேங்குடன் சேர்ந்துக்கொண்டு தர்ஷன் தனது ஒரிஜினாலிட்டியை இழந்து வருவதை கமல்ஹாசன் மறைமுகமாக சாடினார்.

பிக்பாஸ் வீட்டில் வந்த நாள் முதல் செல்லப்பிள்ளையாக இருந்தவர் தர்ஷன். என்ன நடந்தாலும் முதலில் குரல் கொடுப்பவர் தர்ஷனாகத்தான் இருந்தார். எல்லோரும் அஞ்சி நடுங்கிய வனிதாவையே தில்லாக எதிர்த்து நின்று கேள்வி கேட்டவர் தர்ஷன். இதனால் மக்களிடம் அவருக்கு என நல்லப் பெயர் கிடைத்தது.

இதனால், கவின், சாண்டி, லொஸ்லியா மற்றும் முகெனுடன் சேர்ந்து கொண்டு தனது ஒரிஜினாலிட்டியை இழந்து வருகிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கஸ்தூரி, தான் எது பேசினாலும், தர்ஷன் தன்னை நீங்கள் புதுசா வந்தவர் பேசக்கூடாது என்று கூறுகிறார் என கமலிடம் கூறினார். இதனைக்கேட்ட கமல், அவரே புதுசா வந்திருப்பவர்தானே என அவர் மாறிவிட்டதை மறைமுகமாக சாடினார். இதனைக் கேட்டு தர்ஷன் முகம் மாறியதை காண முடிந்தது. இதற்கு கஸ்தூரி நக்கலாக சிரித்ததையும் காணமுடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *