கவினை விட்டு கொடுக்காமல் பேசிய லொஸ்லியா!

Spread the love

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும்போது ஒரே ஒரு நபருடன்தான் பேச முடியும் என்றால் யாருடன் பேசுவீர்கள் என்ற கேள்விக்கு லாஸ்லியா அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முழுவதும் சண்டை, சச்சரவு, அடிதடி என பரபரப்பாக சென்றது. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சி சற்று சுவாரசியம் குறைவாகதான் இருந்தது.

நிகழ்ச்சி 50 நாட்களை கடந்த நிலையில் யாரை மிஸ் பண்றீங்? ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்பது உள்ளிட்ட கேள்விகளை போட்டியாளர்களிடம் கேட்டார் பிக்பாஸ்.

கன்ஃபெஷன் ரூமுக்கு சென்று பதிலளித்த போட்டியாளர்கள் கண்ணீரும் கம்பலையுமாக பதிலளித்தனர். குறிப்பாக சாண்டியும் கவினும் அதிகமாகவே அழுதனர்.

லாஸ்லியா மிகவும் தெளிவாக பிக்பாஸின் கேள்விக்கு பதிலளித்தார். தான் அப்பா என்று அழைக்கும் சேரனின் பாசத்தின் மீதும் அன்பின் மீதும் சந்தேகப்பட்டார். யாரை நம்புவது, யார் நடிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.

அப்பா என்ற பெயரில் காட்டும் பாசம் உண்மையானதுதானா என்ற ரீதியில் பேசிய அவர், நாமினேஷன் குறித்தும் பேசினார். நாமினேஷனுக்காக நெருக்கமாக பழகியவர்களை கூட நாமினேட் செய்ய வேண்டிய நிலைமை வந்துவிட்டதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு செல்லும் பட்சத்தில் வீட்டில் ஒரு நபருடன்தான் பேச வேண்டும் என்றால் யாரிடம் பேசுவீர்கள் என்று கேட்டார் பிக்பாஸ். அதற்கு பதிலளித்த லாஸ்லியா சற்றும் யோசிக்காமல், கட்டாயமாக கவினுடன்தான் என்றார்.

கவினுடன் தான் கடைசியாக பேச ஆசைப்படுவேன், மேலும் கவின்தான் பிக்பாஸ் டைட்டில் வின்னராக வேண்டும் என்று அவரிடம் கூறிவிட்டு செல்வேன். கவினுக்கு நல்ல மனது இருக்கிறது, அதனால் அவர் தான் பிக்பாஸில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

அப்பா அப்பா என்று சேரனை அழைத்து அவருடன் பழகி வந்த லாஸ்லியா, கடந்த சில நாட்களாக அவரிடம் இருந்து விலகியுள்ளார். கவின் மற்றும் அவரது கேங்குடன் நெருக்கமாக உள்ள லாஸ்லியா, கவினின் பேச்சைக் கேட்டு வருகிறார்.

மகள் என்று கூறி சேரன் நடிப்பதாக லாஸ்லியாவிடம் கூறி வருகிறார். சேரனிடம் மீண்டும் லாஸ்லியா பேசுவதால்தான் தான் அப்செட்டாக இருப்பதாகவும் கூறினார். இந்நிலையில் லாஸ்லியா டோட்டலாக கவின் பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டார்.

அப்பா என்று அழைக்கும் சேரனை விடவும் கவின்தான் தனக்கு முக்கியம் என்ற மனநிலையில் உள்ளார் லாஸ்லியா. சேரனிடம் தான் பேசுவேன் என்று கூறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கவினுடன் தான் பேசுவேன் என்று கூறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *