இவன தூக்கினா எல்லாரும் அடங்கிருவாங்க சேரனோடு சேர்ந்து வனிதா போடும் ஸ் கெட்ச்

Spread the love

இவன தூக்கினா எல்லாரும் அடங்கிருவாங்க சேரனோடு சேர்ந்து வனிதா போடும் ஸ்கெட்ச் பிக் பாஸ் வீட்டில் வலுவாக உள்ள பாய்ஸ் கேங்கை உடைக்க வனிதா சதி திட்டம் தீட்டும் வீடியோ வைரலாகியுள்ளது.

சென்னை: சாண்டி டீமை எப்படி காலி செய்வது என சேரனோடு சேர்ந்து கஸ்தூரி மற்றும் வனிதா டீம் திட்டம் போடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக உள்ளனர். சாண்டி, கவின், தர்ஷன், முகென் மற்றும் லாஸ்லியா ஒரு அணியாகவும், சேரன், வனிதா, கஸ்தூரி ஒரு அணியாகவும் உள்ளனர். ஷெரீன் இருதரப்பிலும் நட்பு பாராட்டி வருகிறார்.

நேற்றைய நாமினேசனிலும் இரு அணிகளும் மாறி மாறி எதிர் அணிகளில் இருப்பவர்களை நாமினேட் செய்தனர். இதனால் இரண்டு அணிகளில் இருந்தும் தலா இரண்டு பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

சாண்டி அணியில் இருப்பவர்கள் இளைஞர்கள் என்பதால் எப்போதும் பிக் பாஸ் வீடு ஆட்டமும், பாட்டமும் கொண்டாட்டமுமாக இருக்கிறது. இது வனிதா அணிக்கு பெரும்பாலும் பிடிப்பதில்லை. சேரன் அதிகம் மற்றவர்களைப் பற்றி புறணி பேசுவதில்லை என்றாலும், மற்றவர்கள் அவரிடம் புறணி பேசுகின்றனர். இதனால் அவரும் அவெஞ்சர்ஸ் அணியைப் பற்றி பேச வேண்டியதாகி விடுகிறது.

அப்படியாக இரவு நேரத்தில் வனிதா, சேரன் மற்றும் கஸ்தூரி மூவரும் கார்டன் பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. இதில், ஐவர் அணியை எப்படி உடைப்பது என அவர்கள் திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது வனிதா, ‘முதலில் இந்த அணியின் முதுகெலும்பை உடைக்கணும்’ என்கிறார். அந்த அணியின் முதுகெலும்பு என்பது சாண்டி மாஸ்டர் ஆகும். அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டால், மற்றவர்கள் அடங்கி விடுவர் என்பது அவரது திட்டம். ஆனால் கஸ்தூரியோ அந்த அணியின் பலமில்லாத ஒருவரை டார்கெட் செய்யச் சொல்கிறார்.

அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை கவினை பற்றி அப்படி கூறலாம் எனத் தெரிகிறது. ஏனெனில் எப்போதுமே கஸ்தூரியின் டார்கெட் கவின் தான். அவருக்கும், கஸ்தூரிக்கும் அடிக்கடி முட்டிக் கொள்கிறது. கவினை எப்படியும் வெளியில் அனுப்பியே ஆக வேண்டும் என்பதில் கஸ்தூரி தெளிவாக இருக்கிறார்.

இந்த உரையாடலின் போதும் சேரன் நடுநிலையாகவே பேசுகிறார். மக்கள் முடிவு செய்து கொள்வார்கள் என அவர் கூறுகிறார். இந்த பேச்சின் அடிப்படையில் தான் சாண்டி இந்த வாரம் முதன்முறையாக நாமினேசனுக்கு வந்துள்ளார். ஆனால், அவரை எப்படியும் அதிக வாக்குகளுடன் காப்பாற்ற வேண்டும் என்பதில் சாண்டி ஆர்மியினர் தீவிரமாக உள்ளனர்.

மாரி படத்தில் வரும் காட்சி ஒன்றை வைத்து, வனிதா அண்ட் கோ பேசும் இந்த வீடியோவை அவர்கள் கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் சாண்டி செய்த காமெடிகளை வைத்து இம்முறை அவருக்கு வாக்கு சேகரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *