விரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி? தாமதப்படுத்துவது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்.

Spread the love

நம்மில் சில பெண்கள் திருமணங்கள், இல்ல விழாக்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாக வர வைப்பதற்கு கஷ்டப்படுவதுண்டு.இதற்காக சிலர் மருந்து கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போடுவதுண்டு.

இதனை தவிர்த்து நாம் முடிந்த வரை இயற்கை முறையே சிறந்தது என்று மருந்துவர்கள் கூறுவார்கள்.தற்போது மாதவிடாய் சுழற்சியை விரைவில் வரவழைக்கவும், தாமதாகவும் வரவழைக்க சாப்பிட கூடிய உணவுகள் பற்றி இங்கு பார்ப்போம்.

விரைவில் மாதவிடாய் வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்

பப்பாளி உடலில் அதிக வெப்பம் உருவாக்கி மாதவிடாயை விரைவில் வரவழைக்க மிகவும் பயனுள்ளதாகவும் இதில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.

ஓம விதைகளை தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் குடிப்பது உங்கள் மாதவிடாயை சில நாட்கள் முன்னால் வரவழைக்க உதவும்.

எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் தேதிக்கு 15 நாடகளுக்கு முன் சாப்பிட்டால் விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.

அன்னாசி உடலில் அதிக அளவு உஷ்ணத்தை தூண்டக் கூடிய ஒரு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். அது விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.

மாதவிடாய் தாமதமாக வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்

மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிது வெந்தயத்தை எடுத்து, வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, விலக்கு தள்ளிப் போகும்.

மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம், இதன் மூலம், உடல் சூடு குறைந்து, விலக்கு தள்ளிப் போகும்.பொட்டுக் கடலையை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *