தர்ஷனை சந்திக்க யார் வராங்க தெரியுமா வைரலாகும் புகைப்படம்!உள்ளே!!

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களின் உறவினர்கள் அவர்களை சந்திப்பதற்காக இந்த வாரம் முழுக்க Freeze டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இன்று முகினின் தாய் மற்றும் அவரது தங்கை இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்த டாஸ்க் போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியை தருவது மட்டுமல்லாது. பார்வையளர்களுக்கு நல்ல சுவாரஸ்யத்தை கொடுத்து வருகிறது. எனவே இந்த கடைசி இரண்டு வாரங்களில் தொலைக்காட்சியின் TRPயும் கிடுகிடுவென உயர்ந்துவிடும்.

அந்தவகையில் தற்போது தர்ஷனை சந்திக்க அவரது தாய் மற்றும் தங்கை இருவரும் இலங்கையிலிருந்து கிளப்பியுள்ளனர். அவர்கள் இருவரும் விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

பிரஸ் மீட் என்ற பெயரில் தன் பெயரை தானே கெடுத்து கொண்ட மதுமிதா குவியும் எதிர்ப்பு கண்டனம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் தற்கொலை செய்ய முயன்ற காரணத்திற்காக வெளி ஏற்றப்பட்ட மதுமிதா, நடந்தவை பற்றி முதன் முறையாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் மனம் திறந்திருந்தார்.

விஜய் டிவியின் கொள்கைகளுக்கு உட்பட்டு இதுவரை நேர்காணல்களில் பேசாமல் இருந்து வந்த மதுமிதா, அவர்களின் முன்னிலையிலேயே நேற்று பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தான் வெளியேற்றப்பட்ட 55வது நாள் அன்று, தமிழகம் குறித்து அவர் கூறிய கவிதை, அதன் பின் நிகழ்ந்த அசம்பாவிதங்கள் என விளக்க, ஆரம்பத்தில் மதுமிதாவின் தரப்பில் நியாயம் இருப்பதாகவே தோன்றியது.

ஆனால் தொடர்ந்து பேசிய மதுமிதா, அபிராமி உள்ளாடையை போடாமல் சுற்றினார். 6 வது நாளிலேயே முகீனுடன் பாட்டில் குழந்தை பெற்றார். அதற்கு ஆதரவளித்த வனிதாவை, ‘உன் குழந்தை பள்ளியில் சிறுவனுடன் பாட்டில் குழந்தை பெற்றால் கொஞ்சுவாயா’..? என்றது, ஷாக்சி அகர்வால் ஜட்டி போட்டு சுற்றினார்’ என கீழ்த்தரமாக விமர்சித்தது பெரும்பாலான ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

இந்நிலையில் தற்பொழுது அவருக்கு ஆதரவு அளித்து பேசிய ரசிகர்கள் கூட, ‘மதுமிதாவின் பேச்சு கீழ்த்தரமாக உள்ளது. இது முழுக்க முழுக்க பழிவாங்கும் நோக்கில் கொடுக்கப்பட்ட நேர்காணல்’ என விமர்சித்து பேச துவங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *