பிக்பாஸ் வாக்கெடுப்பில் நடக்கும் ம றை முக மோ சடி: ஆ தாரத் து டன் சி க்கி ய கவின்!

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பலமான போட்டியாளர்களுள் ஒருவராக சின்னத்திரை நடிகரான கவின் தொடர்ந்து விளையாடி வருகிறார். பெண்கள் விஷயத்தில் இவரது பெயர் பயங்கரமாக டேமேஜ் ஆன போதும் தொடர்ந்து அதிக ஓட்டுக்களை பெற்று இவர் தப்பி வரும் நிலையில், இதற்காகவே அவர் வெளியே தனியார் நிறுவனம் ஒன்றை நியமித்து இருப்பதாக ஒரு பதிவு வெளியாகியுள்ளது.

வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில், ஒரு நிமிடத்திற்குள் ‘1 லட்சம் முறை பேஸ்புக் போன்ற சமூக வலைதள கணக்குகளை லாகின் செய்வது, ஒரு புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் வர வைப்பது’ என பல்வேறு ப்ரோக்ராமிங் வழி தகிடுதத்தங்கள் வந்து விட்டன.

இப்படியொரு ப்ரோக்ராமை உபயோகப்படுத்தி கவினுக்கு ஒரு தனியார் நிறுவனம் வாக்குகளை அள்ளி வழங்கி வருவதாக குற்றச்சாட்டு வந்ததுடன், அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒரே நாளில் கவினுக்கு 37,000 வாக்குகள் அளித்துவிட்டு பெருமை அடித்து கொள்ளும் சமூக வலைதள பதிவும் வெளியாகி இருக்கிறது.

கவினுக்கு மட்டுமல்லாது அவரது நண்பர்களான, லாஸ்லியா, சாண்டி ஆகியோருக்கும் இவர்கள் இப்படி வாக்களித்து இருப்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக நடிகை மீரா மிதுனும் இது போன்ற ஒரு குற்றச்சாட்டில் சிக்கி இருந்தார்.

இப்படி போட்டியாளர்களே தங்களுக்கு வாக்களித்து கொள்வதால், பிக்பாஸ் வாக்கெடுப்பின் மீதுள்ள நம்பகத்தன்மை குறைந்து வருவதாக ரசிகர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *