எங்கள் இருவருக்குள்ளும் என்ன உறவு? புகைப்படத்தின் பின்னணியை அதிரடியாக வெளியிட்ட நபர்!

Spread the love

பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டார். ஆனால் இரண்டாவது சீசனில் அவர் இடத்தை யாராலும் எட்டி கூட பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசனில் லொஸ்லியா நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வார காலத்திலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் ஈர்த்துவிட்டார்.

பிக்பாஸில் அவர் செய்யும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதனை வீடியோவாக எடுத்து ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனால் தற்போது லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர். ரசிகர்கள் அவரை விரும்புவதற்கு காரணமே அவரது கேரக்டர் தான்.

சமீபத்தில் இவர் நபர் ஒருவருடன் மாலையும், கழுத்துமாக இருந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன.இதன் பின்னணி என்னவென்று புரியாத பலரும் லொஸ்லியாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா? என்ற குழப்பத்தில் இருந்து வந்தனர்.

தற்போது இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் சமூகவலைதளங்களில் தனது பதிவினை போட்டு விளக்கம் கொடுத்துள்ளார். தாங்கள் இருவரும் யார்? என்ற கேள்விக்கு மிகவும் தெளிவாகவும், அவதூரைப் பரப்பிய நெட்டிசன்களுக்கு சரியான பதிலடியாகவும் கொடுத்துள்ள பதிவு இதோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *