பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா கவின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவீன். இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்த போட்டியாளர்களிடம் தெரிவிந்திருந்தார்.

இதையடுத்து நேற்று திடீரென்று சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த குற்றத்திற்காக கவின் குடும்பத்தைச் சேர்ந்த தாயார் உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தது.

இந்த வாரம் நடைபெற்று வரும் freeze டாஸ்க்கில் சாண்டியின் மனைவி உள்ளே சென்றதாகவும், இதன் போது கவினின் அம்மா விடயத்தை கூறியதால் தான் அவர் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்ட போது எவ்வாறு கண்கள் கட்டப்பட்டு அழைத்து செல்லப்பட்டாரோ அதே போன்று குறித்த புகைப்படத்தில் கவீன் கண்கள் கட்டப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவீன் வெளியேற்றப்பட்டமைக்கான உத்தியோக பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாக வில்லை.

இந்நிலையில் வழக்கறிஞர் சசிகுமார் கவீன் அம்மா வழக்கு குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், கவீன் அம்மா ராஜலட்சுமி மற்றும் சிலர் 5 பேர் ஏலச்சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளனர். அப்போது அவர்கள் இந்த சீட்டு கம்பெனியை பதிவு செய்யவில்லை, ஒரு சீட்டு கம்பெனி நடத்தினால் பதிவு செய்ய வேண்டும் இவர்கள் பதிவு செய்யவில்லை.

அதுமட்டுமின்றி மோசாடி செய்த குற்றத்திற்காக வழக்கு நடந்து வந்துள்ளது. இந்த வழக்கு கடந்த 1998-ஆம் ஆண்டிலிருந்து 2006-ஆம் வரை நடந்துள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் இறந்துவிட்டனர். அதைத் தொடர்ந்து உடன் இருந்த அதாவது சக குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம், தண்டனை கொடுக்கப்படலாம். அது

பொதுவாக சிறை தண்டனை 2 ஆண்டுகளாக இருந்திருந்தால், இதில் நீதிமன்றமே தலையீட்டு அவர்களை பிணைக்கைதிகளாக விடுதலை செய்ய அதிகாரம் இருக்கு, ஆனால் அதற்கு மேல் சென்றுவிட்டால், அவர் சிறைக்குள் சென்ற பின்பு தான் பெயில் பெற முடியும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *