உன்னால என்னை காரிது ப்பு றாங்க.. தூக்கி எ றிந்து விட்டு வா! லொஸ்லியாவின் கதற லுக்கு தந்தையின் கோ பம்… லீ க்கான ப்ரொமோ

Spread the love

பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டார். ஆனால் இரண்டாவது சீசனில் அவர் இடத்தை யாராலும் எட்டி கூட பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசனில் லொஸ்லியா நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வார காலத்திலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் ஈர்த்துவிட்டார்.

பிக்பாஸில் அவர் செய்யும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதனை வீடியோவாக எடுத்து ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனால் தற்போது லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர். ரசிகர்கள் அவரை விரும்புவதற்கு காரணமே அவரது கேரக்டர் தான்.

இதேவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இந்த டாஸ்க் ஆனது போட்டியாளர்களை மட்டுமின்றி, பார்வையாளர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் வெளியான ப்ரோமோவில் சேரன் உள்ளே வந்து சர்ப்ரைஸ் தந்ததை அடுத்து, லொஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதனால் லொஸ்லியா பயங்கரமாக அழுது துடித்தார்.

வரும் பொழுதே இறுக்கமான முகத்தினை வைத்துக்கொண்டு தான் வந்துள்ளார். அவரது முகத்தில் அப்பொழுதே கோபம் தெரிந்தது.

இந்நிலையில் மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கடுமையாக லொஸ்லியாவை திட்டியுள்ளார். இதற்காக அனுப்பினோம்… எல்லாரும் காரி துப்புறாங்க…. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுட்டு உள்ளே வா என்று கோபமாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *