க ட த் தி வி ற்க ப் பட்ட சிறுவன்… 20 ஆண்டுகளுக்கு பி ன்னர் பெ ற்றோ ருடன் ச ந்திப்பு.. ஆ னால் ஒருவருக் கொருவர் பே சவே இ ல்லை… ஏன் தெரியுமா?

Spread the love

20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுவனை கடத்தி விற்றுவிட்டது ஒரு நிறுவனம். நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர் சிறுவனைக் கண்டுபிடித்துவிட்டாலும் அவர்கள் குடும்பமாய் இணைந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அது ஏன் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகேஷ்வர்ராவ். இவரது மனைவி சிவகாமி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதில் இவர்களின் மகன் சுபாஷ் மூன்று வயதாக இருக்கும்போது மர்மகும்பலால் கடத்தப்பட்டார். இந்த குழந்தையை மலேசியன் சமூகசேவை என்னும் நிறுவனத்திடம் சட்டவிரோதமாக விற்றனர். இந்த நிறுவனம் இப்படி குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கி அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலக அளவில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்று வந்திருக்கிறது. சுபாஷை அவினாஷ் என்னும் பெயரில் விற்க, அவன் அதே பெயரில் அமெரிக்காவில் வளர்ந்து வந்தான்.

இந்நிலையில் சிறுவனின் நிஜதந்தை நாகேஷ்வரராவ் தொடுத்த வழக்கில் மலேசிய நிறுவனத்தில் தொடர்பு அம்பலமானது, அது தொடர்பான விசாரணையில் அவினாஷின் போன் நம்பரை வாங்கினார்கள். இந்த ப்ராஷஸ் எல்லாம் முடிஅ 20 வருசங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் தான் சுபாஷின் சகோதிரி சரளாவுக்கு அந்த நம்பர் கிடைக்க, வாட்ஸ் அப் மூலம்தன் அண்ணனிடம் பேசி உண்மையி எடுத்துக்கூறி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சென்னை வந்தவர் தன் உண்மையான குடும்பத்தை சந்தித்தார். ஆனால் அமெரிக்காவில் வாழ்ந்து, வளர்ந்த சுபாஸ்க்கு தமிழ் தெரியவில்லை. அவரது பெற்றோருக்கு அவரிடம் பேச ஆங்கிலம் தெரியவில்லை. இருவரும் கட்டிஅணைத்துக் கொண்டாலும் மொழிப் பிரச்னையால் பேஅ இயலவில்லை. சுபாஷின் தங்கை மட்டும் ஆங்கிலத்தில் உரையாடினார். தொடர்ந்து அமெரிக்காவுக்குபோன சுபாஷ் அடுத்தமுறை முழுமையாக தமிழ் படித்துவிட்டு தன் குடும்பத்தை சந்திக்க வருவதாக கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *