மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய தமிழ்ப்பெண்! வி மர்சித்த இணைய தளவாசிகள்!

Spread the love

கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் மாப்பிளைக்கு மணப்பெண் தாலி கட்டியதை போல சுவிற்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த மணப்பெண் மாப்பிள்ளைக்கு தாலி கட்டியுள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவில் விஜயபுரா என்கிற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன், மாப்பிள்ளைக்கு மணமகள் தாலி காட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனை மக்கள் ஆச்சர்யமாக பார்த்திருந்தாலும் கூட, இது அசாதாரணமான ஒன்றும் இல்லை. எங்கள் குடும்பத்தில் இவ்வாறு பல திருமணங்கள் நடைபெற்றுள்ளன என அவர்களுடைய குடும்பத்தினர் கூலாக பதில் கொடுத்தனர்.

இந்த திருமணமானது மண்டபத்தில் 12ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான பசவன்னா சிலைக்கு அருகே நடைபெற்றது. மணமகன்கள் தாலி கட்டி முடிந்த பின்னர், மணமகள்கள் மாப்பிள்ளைக்கு தாலி காட்டுவார்கள். ஆண் – பெண் இருவரும் சமம் என்பதை இது காட்டுவதாக அவர்கள் கூறியிருந்தார்கள்.

இந்த முறையானது தற்போது சுவிற்சர்லாந்து வரை பரவியுள்ளது. இலங்கையை சேர்ந்த தமிழ்ப்பெண் ஒருவர் மணமகனுக்கு தாலி கட்டிய பின்னர் அதற்கு முத்தமிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனை இணையதளவாசிகள் சிலர் விமர்சித்தாலும், இது பண்பாடா? பிறழ்வா? புரட்சியா? என பெரும் குழப்பமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *