ஆவாரம்பூவை இப்படி டீ போட்டு குடித்தால் சக்கரை நோய் மட்டுமல்ல ஆயுள் கூட இரட்டிப்பாகுமாம்!

Spread the love

நம்முடைய ஆயுளை அதிகரிக்கச் செய்கின்ற ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள் இந்த ஆவாரம்பூவில் உண்டு. அத்தகைய அரிய மருத்துவ குணம் மிக்க மூலிகை பற்றி இங்கே வரிவாகப் பார்க்கலாம்.

ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும்.

இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருந்தாகப் பயன்படும்.

வளரும் இடம்
ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும். இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருநு்தாகப் பயன்படும்.

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று ஒரு அற்புதமான பழமொழி கூட இந்த தாவரம் பற்றி இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த ஆவாரையில் உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் நிறைந்திருக்கிறது.

அடங்கியவை
ஆவாரம்பூவில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளவனாயிடுகள், சபோனின், கிளைக்கோசைடு, ஸ்டீராய்டு போன்ற வேதிப் பொருள்கள் நிறைந்துள்ளன.

மலச்சிக்கல்
மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது.

ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது. மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.

சருமத் தொற்று
நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரிசெய்ய வேண்மென்றால், ஆவாரம்பூவை அரைத்து சருமத்தில் தடவலாம். அல்லது தேநீராக்கி உள் மருந்தாகவும் குடிக்கலாம்.

சிறுநீர் தொற்று
ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.

காய்ச்சல்
அதிகப்படியான மருத்துவு குணங்கள் கொண்ட ஆவாரம்பூ தேநீரை தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும்.

நீரிழிவு நோய்
பெரும்பாலானோர் உணவுக் கட்டுப்பாடு இன்றி, இன்சுலின் சுரப்பு சரியாக இல்லாமல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும்.

ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும். இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.

மேனி பளபளப்பு
ஆரோக்கியம் மட்டுமல்ல. அழகு விஷயத்திலும் மிகச்சிறந்த பலன்களைத் தரும் ஆவாரம்பூ. ஆவாரம்பூவை உலர வைத்து பொடி செய்து, குளிக்கும்போது மேனிக்குப் பயன்படுத்தலாம். இதனால் உடலில் ரத்தம் சுத்தமடையும். அதோடு மேனியும் தங்கமாக மின்ன ஆரம்பிக்கும்.

வயிற்றுப்புண்
காய வைத்து பொடி செய்த ஆவாரம்பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை அத்தனையும் தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *