என் வா ழ் கை கெ ட் டு போ ன தே இதனால் தான் க ண் ணீ ர் வி டும் மனிஷா கொய்ராலா

தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மனிஷா கொய்ராலா இந்தி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சாம்ராட் டாகல் என்பவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். மனிஷா கொய்ராலா 2012-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார்.

இந்நிலையில்,புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்சிகளை தொடர்ந்து நடத்தி வரும் இவர் சமீபத்தில் அப்படியொரு நிகழ்ச்சியை நடத்தினார். அதில் பேசிய அவர், மதுப்பழக்கம் தான் என்னுடைய வாழ்கையை சீரழித்து விட்டது.

ஆரம்பத்தின், சினிமாவில் நடிக்கும் போது கூச்சமாக இருந்தது. அந்த கூச்சத்தை மறக்க குடிப்பழக்கம் எனக்கு உதவியது. ஆனால், என்னுடைய வாழ்கையை பின்னாளில் அது சீரழித்து விட்டது.

புற்றுநோய் குறித்து நான் எழுதிய புத்தக்கத்தில் இதனை கூறியுள்ளேன். மதுப்பழக்கத்தை விட்ட பிறகு, இப்போது புதிதாக பிறந்த உணர்வு ஏற்படுகிறது. சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டு வாழ்கை என்ற பேரின்பத்தை இழந்து விட்டேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இளைஞர்கள் மது பழக்கத்தை வெறுக்க வேண்டும். பந்தா, ஸ்டைல், சோசியலிசம், கெத்து என நினைத்துக்கொண்டு மதுபழக்கத்திற்கு மெல்ல மெல்ல அடிமையாகி வரும் ஒன்றை உணர வேண்டும்.

வாழ்கை என்ற பெரியvவிஷயம் உங்கள் முன்னாள் இருக்கிறது. அதனை மனதில் கொண்டு மதுபழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று உருக்கமாக பேசியுள்ளார் மனிஷா கொய்ராலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *