ஆராய்ச்சியில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..! முருங்கை இலையால் புற்றுநோய்க்கு ஏற்பட்ட ஆபத்து

Spread the love

பல வியாதிகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவு முறைகளில் இருந்தே குணப்படுத்த முடியும். இதே போன்றுதான் ஒரு அண்மை ஆராய்ச்சியில் புற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை இலைகளுக்கு உண்டு என கண்டறிந்துள்ளனர். மேலும் இதில் அதிக படியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எவ்வாறு முருங்கை இலை புற்றுநோயை குணப்படுத்த உதவும் என்பதை இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நமது உணவில் அன்றாடம் பயன்படுத்தும் பல உணவு பொருட்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அப்படிப்பட்ட ஒன்றுதான் முருங்கை கீரையும். பொதுவாக குழந்தைகளுக்கு கீரை வகைகளை கண்டாலே பிடிக்காது. ஆனால் அவர்கள் அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காக கீரைகளை அவர்களுக்கு கொடுக்காமல் விட்டுவிடாதீர்கள். எல்லா கீரை வகைகளிலும் எக்கச்சக்க ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதற்கு எந்த வகையிலும் முருங்கை கீரை துளி அளவும் குறைந்தது இல்லை. இதில் பல்வேறு வகையான சத்து பொருட்கள் இருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக நம் உணவில் பயன்படுத்தி வரும் முருங்கை, அதிக நன்மைகளை கொண்டது. என்னென்ன ஊட்டசத்துக்கள் இதில் உள்ளது என்பதை அறிந்து கொள்வோம். வைட்டமின் ஏ வைட்டமின் பி1, பி2, பி3, பி6 கால்சியம் பொட்டாசியம் இரும்பு சத்து பாஸ்பரஸ் ஜின்க் மெக்னீசியம் அத்துடன் இதில் மிக குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது.

புற்றுநோயை தடுக்குமா..? உண்மையிலேயே முருங்கை கீரை புற்றுநோயை தடுக்க பயன்படுவதாக ஆரய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது புற்றுநோய் கட்டிகள் உடலில் உருவாவதை முன்கூட்டியே தடுக்கும். அத்துடன் புற்றுநோய் கட்டிகளை அழிக்க இது நன்கு உதவுகிறது. பென்சயில் இசோதியோசைனட் (benzyl isothiocyanate) என்னும் மூல பொருள் முருங்கையில் அதிகம் உள்ளதால் புற்றுநோய் ஏற்படாமல் காக்கும். எனவே புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இயற்கையகவே முருங்கைக்கு உள்ளது. இனி எவ்வாறு இது புற்றுநோயை குணப்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சில அண்மைய ஆராய்ச்சிகள் முருங்கையில் உள்ள எண்ணற்ற நன்மைகளை கண்டறிந்தனர். அதில் மிக முக்கியமான சிலவற்றை இதுவே… – கல்லீரலை சுத்தம் செய்யும் – நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் – உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை அழிக்கும். – எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதிப்படுத்தும்

எவ்வாறு புற்றுநோயை குணப்படுத்தும் ..? தினமும் முருங்கை கீரையின் சாற்றை 300 ml குடித்து வந்தால் புற்றுநோய் கட்டிகளை எளிதில் உடலில் இருந்து நீக்க முடியும் என்கிறது இந்த ஆராய்ச்சி. எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலிமையாக்கி வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கிறது. இதில் உள்ள நியாஸிமிஸின் (niazimicin) என்ற மூல பொருள் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் புற்றுநோய் செல்களை சிறிது சிறிதாக அழிக்கவும், செல்கள் வளர்ச்சியை முற்றிலுமாக தடை செய்கிறது. மேலும் இப்போதெல்லாம் முருங்கை இலையை பொடி செய்து அதனை கேப்சியூல் போன்று விற்க தொடங்கி விட்டனர். இது பெரிதும் உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தினமும் முருங்கையா..? தினமும் பச்சை காய்கறிகள் உண்பது எவ்வளவு உடலுக்கு நல்லதோ அதே போன்றுதான் கீரை வகைகளை உணவில் சேர்த்து கொள்வதும். தினமும் முருங்கை கீரையை மட்டும் சாப்பிடாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேரு கீரைகளை உட்கொள்ளுதல் அதிக ஆரோக்கியத்தை பெறலாம். புற்றுநோய்க்கு மட்டுமில்லாமல் இது பல பயன்களையும் கொண்டுள்ளது.

பயன்கள் உங்கள் தோல் சார்ந்த அனைத்திற்கும் ஒரு மிக சிறந்த மருந்து முருங்கையே. முருங்கை கீரையை சாப்பிட்டு வந்தால், உங்கள் சருமத்தை எப்போதும் சுத்தமாகவும், கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்கலாம். முடி உதிரும் பிரச்சினையே நம்மில் பலருக்கு பலவித வியாதிகளையும் தர வல்லது. முருங்கை இவற்றிலிருந்து விடுபட உதவும். முடி பாதுகாத்து நன்கு வளர செய்யும்.கல்லீரல் பாதிப்படைவதை தடுத்து நோய்களில் இருந்து காக்கும்.

ரத்த சோகை உள்ளவர்களுக்கு முருங்கை சரியான தீர்வு. இதில் அதிகம் இரும்பு சத்து உள்ளதால் ரத்தத்தை நன்கு சுரக்க செய்து சீரான முறையில் இருக்க வைக்கும்.செரிமான கோளாறுகள் அதிகம் ஏற்படுபவர்கள் முருங்கை கீரையை சூப் போல குடித்து வந்தால் மலசிக்கல் குணமடையும்.உடலில் பாக்டீரியாக்களை கொன்று எந்தவித நோய் தொற்றும் இல்லாமல் பாதுகாக்கும். அத்துடன் குடல் புண்களையும் சரி செய்யும்

முருங்கை கீரையில் அதிகம் கால்சியம் இருப்பதால் எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் எலும்புகளுக்கு அதிக உறுதியை தரும். எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் முருங்கை கீரையை வாரத்திற்கு 4 முறை உணவில் சேர்த்து கொண்டால் நல்லது.இன்று அதிக பேர் அவதிப்படும் ஒன்று மன அழுத்தமே. முருங்கை இதற்கு நல்ல தீர்வை தருகிறது. மேலும் பசியின்மையை போக்கி பசியை தூண்டும்

செய்ய கூடாதவை :- கர்ப்பிணிகள் முருங்கையை அதிகம் எடுத்து கொள்ள கூடாது. எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும் என்பதை தங்கள் மருத்துவரிடம் கேட்டு அதன்படி சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் முருங்கையை சாப்பிட வேண்டுமென்றால் மருத்துவரின் ஆலோசனை மிக அவசியம். ஏனெனில் சர்க்கரை அளவை சில சமயங்களில் இது அதிகரிக்க செய்யும்.

One thought on “ஆராய்ச்சியில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..! முருங்கை இலையால் புற்றுநோய்க்கு ஏற்பட்ட ஆபத்து

  • April 20, 2019 at 4:24 pm
    Permalink

    Super tips thanks

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *