ஈ வு இ ர க் க மே இல் லா ம உ ரு வி போட்ட அட்லீ ! கொஞ்சம் கூட கூ ச் ச மே இல் லை யா ரசிகர்கள் கேள்வி!

இயக்குனர் அட்லீ என்னதான் வரிசையாக வெற்றிப்படங்கள் கொடுத்தாலும் அவர் மீது, கதை திருட்டு, காட்சி திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டே வருகிறது.

முழு திரைப்படமே ஷாருக்கானின் ‘சக் தே இந்தியாவின்’ தழுவல் எனும் நிலையில், பிகில் திரைப்படத்தின் பல காட்சிகளை சிறு வித்யாசம் கூட இல்லாமல் ஹாலிவுட் படங்களில் அப்பட்டமாக சுட்டதற்கான வீடியோ ஆதாரங்களும் முன்னதாக வெளியாகி இருந்தது.

இந்நிலையில், படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் ஆகிவிட்ட நிலையில், இதுபோன்று மற்றொரு காட்சியும் ரசிகர்களின் கண்ணில் சிக்கி இருக்கிறது.

பிகில் திரைப்படத்தின் ஒரு காட்சியில், அணியாக செயல்படுவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில், அவரது அணியில் ஒருவர் தவறு செய்தாலும் ஒட்டுமொத்த அணிக்கும் விஜய் தண்டனை கொடுக்கும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட காட்சியானது, கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான மிராக்கிள் சீசன் என்கிற படத்தின் அப்பட்ட காப்பி என்பதை இறுதிரைப்படங்களின் காட்சிகளையும் ஒப்பிட்டு, அட்லீயை கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *