பணவரவு தடைபட வீட்டின் இந்த அமைப்பு தான் காரணம்?

பணம் என்பது மனித வாழ்வில் மிகமிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. அத்தியாவசிய தேவைக்காக பணம் சம்பாதிப்பதிலேயே மனிதன் தன் வாழ்நாளில் 50 சதவீத பங்கினை செலவிடுகிறான். அப்படி நேரம் செலவிடும் போதும்கூட சில பேருக்கு பணம் என்பது எளிதாக கிடைத்துவிடுவதில்லை.

அந்தவகையில் ஒருவருடைய வீட்டின் அமைப்பு தவறாக இருந்தாலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மலை அளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கடுகளவு தான் பலன் வந்து சேருகிறதே என்ற வேதனை தான் மிஞ்சும்.

பண வரவை தடைசெய்யும் வீட்டின் அமைப்புகள்

வடக்கு முழுவதும் மூடிய வீட்டின் அமைப்பு இருப்பது. நான்கு புறமும் காம்பவுண்ட் இல்லாத அமைப்புகள், வடகிழக்கில் வடக்கு பக்கம் ஜன்னல் இல்லாத அமைப்பு வருவது. வடகிழக்கில் கிழக்கு பக்கம் ஜன்னல் இல்லாத அமைப்புகள் வந்தாலும் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும்.

வடகிழக்கில் மிகப்பெரிய அளவில் போர்டிக்கோ அமைப்புகள் இருப்பதும் ஒரு காரணமாகும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஜன்னல்களை திறந்தாலும் வானம் தெரியாத அளவில் பெரிய அளவில் போர்டிக்கோ அல்லது தாழ்வாரங்கள் அமைத்திருப்பது. வடகிழக்கிலுள்ள ஜன்னல்களை எப்பொழுதுமே மூடிய நிலையில் வைத்திருப்பது. பூஜையறை வடகிழக்கில் வைத்து அந்த இடத்தை எப்பொழுதுமே மூடிய நிலையில் வைத்திருப்பது. வடகிழக்கில் கழிவறை வைத்திருப்பது, சமையலறை வைத்திருப்பது, வடகிழக்கில் மாடிப்படி அமைப்பது இவ்வாறு இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டில் செல்வம் தங்காது.

வடகிழக்கில் சூரிய ஒளி உள்ளே வர முடியாத அளவிற்கு மிக அருகாமையில் கட்டமைப்புகள் மிக உயரமாக இருப்பது, வடகிழக்கில் மரம், செடி, கொடிகளை வளரவிட்டு, வடகிழக்கு பகுதியை மூடி சூரிய ஒளி உள்ளே வரமுடியாத நிலையில் இருப்பதும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் காம்பவுண்டிற்கும், வீட்டிற்கும் உள்ள இடைவெளி 6 அடிக்கும் குறைவாக இருப்பது தவறான அமைப்பாகும்.

வடகிழக்கில் முக்கிய வாசலில் நிலை கதவில் வரக்கூடிய நிரந்தர கண்ணாடியை ஜன்னலாக பாவித்து கொள்வது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருக்கும் ஜன்னல்களில் மொத்தமான ஸ்க்ரீன் துணியை கொண்டு நிரந்தரமாக மூடி இருப்பது. வடகிழக்கில் சிட் அவுட் கட்டமைப்புக்காக, வடக்கு அல்லது கிழக்கில் ஜன்னல் இல்லாமல் வீட்டை உருவாக்குவதும், வடக்கிலும், கிழக்கிலும் சூரியன், சுக்கிரன், புதன் கிரகத்தை மையமாக கொண்டு முக்கிய வாசல், முக்கிய ஜன்னல் நீச்ச பகுதியில் வைத்துக் கொள்வதும் தாவறான அமைப்பாகும். நீங்கள் வசிக்கும் வீடுகளில் பணப்பிரச்னை இருக்குமானால், மேற்கூறிய அந்த வீட்டின் அமைப்பு தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *