ரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை அளவைக் குறைக்கும் இந்த மருந்தை தெரியுமா!

தற்போது உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் தான் காரணம். இப்போது இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள் மற்றும் அதற்கான ஓர் இயற்கை மருந்து குறித்து காண்போம்.

அறிகுறிகள்

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், வாய் வறட்சி, வயிற்று பிரச்சனைகள், எப்போதும் தாகம், சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு, பாலியல் உறவில் நாட்டமின்மை, கவனச் சிதறல், நரம்பு பிரச்சனைகள், எந்நேரமும் பசியுணர்வுடன் இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவில் சிறுநீர் கழிப்பது, நாள்பட்ட சோர்வு, மங்கலான பார்வை, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:

தண்ணீர் – 1 லிட்டர் , கிராம்பு – 60 கிராம் , பட்டை – 4 துண்டுகள்

தயாரிக்கும் முறை:
நீரில் கிராம்பையும், பட்டையையும் போட்டு கலந்து, ஃப்ரிட்ஜில் 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். 5 நாட்கள் கழித்த பின் மருந்து தயாராகிவிட்டது என்று அர்த்தம்.

எப்போது பருக வேண்டும்?

இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் 100 மிலி குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வர, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருப்பதுடன், இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதையும் காணலாம். மேலும் சில இதர வழிகள் கீழே…

துளசி
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

முருங்கை இலைகள்
சிறிது முருங்கை இலைகளை அரைத்து சாறு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வர, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

சிறுகுறிஞ்சான்
சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.

ஆளி விதை (Flax seeds)
1 டேபிள் ஸ்பூன் ஆளி விதைப் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்.

பட்டை
சர்க்கரை நோய் உள்ளவர்கள், தினமும் 1/2 டீஸ்பூன் பட்டைப் பொடியை உணவில் சேர்த்து வர, சர்க்கரை அளவு குறைவதோடு, உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருந்து, இதய நோய்க்கான அபாயம் குறையும்.

நாவல் பழம்
தினமும் காலையில் 5-6 நாவல் பழங்களை சாப்பிட, இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். வேண்டுமானால், நாவல் பழத்தை விதைகளை உலர்த்தி பொடி செய்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் காலையில் குடித்து வந்தாலும், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.

வேர்க்கடலை அற்புதமான நொறுக்குத் தீனி. இதனை எண்ணெயில் பொரிக்காமல் ஆவியில் வேக வைத்து சாப்பிட வேண்டும். இதிலுள்ல சத்துக்கள் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.வேர்கடலையை பெரும்பாலோனோர் கொழுப்பு மிக்க உணவே என்று நினைக்கிறார்கள். உண்மையில் இதில் நல்ல கொழுப்பு அமிலங்களே உள்ளன.இவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை அளவை குறைக்கும். இதன் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் :
வேர்க்கடலை நோய்களிலிருந்தும் தொற்றுகளிலிருந்தும் நம்மை காப்பாற்றும். குறிப்பாக ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மை காக்க தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது

ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் :
அடிப்பட்டால் ரத்தம் உறையாமல் அதிக ரத்தப் போக்கு உண்டாகும் ஹீமோஃபீலியா போன்ற நோய் குணப்படுத்தும் ஆற்றக் கொண்ட்டது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது

இளமையை அதிகரிக்கும் :
இது இளமையை நீட்டிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் செல் வளர்ச்சியை தூண்டி முதுமடையச் செய்வதை தடுக்கிறது.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கி அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். ஆய்வுகள் தெரிவிக்கின்றன

குறிப்பு:- தகவல்கள் அறிவு நோக்கத்திற்காகவே பகிரப்படுகிறது. ஒரு வைத்தியரின் ஆலோசனை இல்லாமல், ஒரு உடல்நலப் பிரச்சினைக்கோ அல்லது நோயை கண்டறியவோ அல்லது சிகிச்சை செய்யவோ தகவல்களை பயன்படுத்தக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *