நம்ம பாகுபலி ஹீரோ பிரபாஸ் திருமணம் செய்யவுள்ள பெண் யார் தெரியுமா ?

நம்ம பாகுபலி ஹீரோ பிரபாஸ் திருமணம் செய்யவுள்ள பெண் யார் தெரியுமா ? சுமார் வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா நடிகர் பிரபாஸ் அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபரின் மகளை திருமணம் செய்யக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகுபலி படத்தில் நடித்த போது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்று பேச்சு கிளம்பியது. அய்யோ, அனுஷ்கா என் காதலி இல்லை தோழி மட்டுமே என்று பிரபாஸ் பல முறை விளக்கம் அளித்தும் யாரும் நம்பவில்லை.

பிரபாஸ் விஷயத்தில் அனுஷ்கா அமைதியாக உள்ளார். பிரபாஸுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Loading...

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள சாஹோ படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. அந்த படம் ரிலீஸான பிறகு பிரபாஸின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். உங்களுக்கு ஏற்ற ஜோடி அனுஷ்கா தான் பிரபாஸ் காரு என்று ரசிகர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பிரபாஸ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை.

முன்னதாக சாஹோ படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதே நாளில் அக்ஷய் குமாரின் மங்கள்யான் படம் ரிலீஸாவதால் சாஹோ ரிலீஸை தள்ளி வைத்துவிட்டார்கள். சாஹோ ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாவதாக இருந்ததால் தான் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியே மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்துள்ள படம் சாஹோ. அந்த படத்தின் போஸ்டர்கள் வெளியான போது அது ஹாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சாஹோ படத்திற்காக பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளனர். சாஹோ மூலம் ஷ்ரத்தா கபூர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸின் மாமா மற்றும் சகோதரியும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், மிகப்பெரிய தொழிலதிபரான அந்த அமெரிக்கரின் பூர்விகம் தெலுங்கானா தானாம். இந்த திருமணத்தின் மூலம், பிரபாஸிற்கு வரதட்சணை மட்டுமே 3000 கோடியை தாண்டும் என்ற உறுதிபடுத்தப்படாத தகவல் ஒன்றும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *