9 மணி நேரம் தூங்கினால் ரூ.1லட்சம் சம்பளம்… இந்தியாவில் தாங்க இந்த ஆஃபர்!

மக்களை நிம்மதியான தூக்கத்திற்கு ஊக்குவிப்பதற்காக நிறுவனம் ஒன்று தினமும் 9 மணி நேரம் தூங்கினால் 1 லட்சம் ரூபாய் சம்பளமாக அறிவித்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் இருந்து வந்ததை அவதானித்தோம். ஆனால் பெங்களூருவை சேர்ந்த வேக் ஃபிட் (Wakefit) என்ற நிறுவனம், குளு குளு ஏசியில் 100 நாட்கள் பஞ்சு மெத்தையில் 9 மணி நேரம் தூங்கினால் 1 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு தூங்குவதில் ஆசை, ஆர்வம், காதல் என இந்த தகுதிகள் இருந்தால் போதும் என்று அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி அங்கு தங்கும் நபர்களுக்கு நவீன உடற்பயிற்சி கருவிகள், ஸ்லீப் டிராக்கர், நிபுணர்களின் கவுன்சிலிங் என வழங்கப்படுகின்றதாம். தூங்குவதால் ஒருவருக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் காதலை காணொளியாக அனுப்ப வேண்டுமாம். இதே போன்று 100 நாட்கள் சிறப்பாக செய்து முடித்தால் ரூபாய் 1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகின்றதாம்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இணை இயக்குநர் கூறுகையில், இன்றைய சூழ்நிலையில் தூக்கத்தினையும், தினசரி கடமைகளையும் நபர்கள் மறந்துவிடுகின்றனர். அதன் முக்கியத்தினையும், அதனா் உடல் நலம், வாழ்க்கை தரம் எவ்வாறு பாதிக்கும் என்பதை தெளிவு படுத்தவே இவ்வாறான முயற்சியில் இறங்கியுள்ளார்களாம். ‘தூக்கத்திற்கு தீர்வு காணும் நிறுவனமான இது மக்களை நிம்மதியான தூக்கத்திற்கு ஊக்கவிப்பதற்காக இம்முயற்சியினை எடுத்துள்ளார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *