எடப்பாடியை வெளுத்து வாங்கிய மீரா மிதுன்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாழாகிவிட்டதாகவும் படித்தவர்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் நடிகை மீரா மிதுன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மீரா மிதுன் என்ன பேசினாலும் பிரச்சனையில்தான் போய் முடிகிறது. ஏற்கனவே பல்வேறு புகார்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளான மீரா மிதுன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது இயக்குநர் சேரன் மீது தவறான குற்றச்சாட்டைக் கூறி மக்களின் பெரும் கோபத்திற்கு ஆளானார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், தொழிலதிபர் ஜோ மைக்கெல்லை கொலை செய்ய சொல்லும் ஆடியோ லீக்காகி அதிர்ச்சியை கிளப்பியது.

Loading...

இதனை தொடர்ந்து பேட்டி ஒன்றில் பேசிய மீரா மிதுன், கெட்ட வார்த்தையில் அசிங்க அசிங்கமாக திட்டித்தீர்த்தார். இந்த வீடியோக்கள் வைரலானது. முகெனுடன் தான் இருக்கும் வீடியோக்களை பிஜிஎம் போட்டு வைரலாக்குமாறு கூறினார். இந்த ஆடியோவும் தீயாய் பரவியது.

நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் மீரா மிதுன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதால் கடுப்பான அவர் சன் பிக்ஸர்ஸ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரை விளாசினார். இந்நிலையில் தமிழக அரசு மீது பாய்ந்திருக்கிறார் மீரா மிதுன்.

அதாவது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இரும்பு பெண்மணியின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கந்தலாகிவிட்டது. படித்தவர்கள்தான் மாநிலத்தை ஆட்சி செய்ய வேண்டும். அரசியல்வாதியாக இருக்க அதுதான் பெரிய தகுதி என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மாநிலத்தில் மடிந்துகொண்டிருக்கும் சட்ட ஒழுங்கை தமிழக முதல்வர் கவனிக்க வேண்டும். பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. தமிழக காவல்துறை கிரிமினல்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது என்றும் கூறியிருக்கிறார் மீரா மிதுன்.

இதேபோல் மற்றொரு டிவிட்டில் எல்லாவற்றிற்கும் மேலாக, லஞ்சம், அநீதி மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் போன்றவற்றால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. எனது புகார்களுக்கு கமிஷனர் உட்பட எந்த காவல்துறை அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை, அதற்கு பதிலாக நான் தமிழக போலீஸால் துன்பத்திற்கு ஆளானேன். இவ்வாறு தமிழக அரசையும் தமிழக காவல்துறையும் விளாசி டிவிட்டியிருக்கிறார் மீரா மிதுன்.

ஏற்கனவே மீரா மிதுன் மீது பல மோசடி புகார்களும், கொலை முயற்சி புகார்களும் உள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே மீரா மிதுன் படு கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் போட்டு டைம் லைனில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *