நண்பர்களே பொறுமையாக படியுங்கள்! நெல்லிக்கனி பற்றிய அற்புத மருத்துவ தகவலை வழங்கியுள்ளேன்! கட்டாயம் படியுங்கள்! பகிருங்கள்!

நெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும்.உலர் பழத்தைச் சாப்பிட்டு வர கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.நெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். புழுக்களை அழிக்கும்.நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.நெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரையைக் குறைக்கும் நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும்.நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.

நெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.நெல்லிப் பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் மாறும்.நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து, நரை (ஆரம்பக்கட்ட நரை) முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது.நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும்.

நெல்லிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் நீங்கும்.பாலில் நெல்லிப்பொடியைக் கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய்விட்டு கலக்கி அருந்திவர கக்குவான் இருமல் குணமாகும்.நெல்லிக்காயைத் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் நீங்கும். பல் கிருமிகள் அழியும்.நெல்லிச்சாறில் சந்தனம் உரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.நெல்லி விதையை ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும்.

நெல்லி லேகியம் உண்டு வந்தால் இதயம் வலிமை பெறும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும்.நெல்லிச் சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும்.நெல்லிப்பொடி, நெல்லி லேகியம் இவைகள் மதுவால் புண்ணாகிப்போன உள்ளுறுப்புகளைச் சீராக்கும்.

ஆமலகம் என்று கூறப்படும் நெல்லியின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். கருநெல்லி (கிடைப்பது அரிது), அருநெல்லி (எளிதில் கிடைக்கும்) என இரு வகைப்படும். நெல்லிக்காய் பசுமை நிறமாகவும், நெல்லிப்பழம் வெண்மஞ்சள் நிறமாகவும் காணப்படும். நெல்லிப்பழம் உலர்ந்த பின்னர் கருப்பாக இருக்கும். இதற்கு நெல்லிமுள்ளி என்று பெயர். இதனை நெல்லி வற்றல் என்றும் அழைப்பர். நெல்லி முச்சுவை உடையது; முதல் சுவை புளிப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். நெல்லியை சுவைத்த பின்னர் தண்ணீர் அருந்தியவுடன், இனிப்புச் சுவையான நீர்போல் சுவைப்பதன் காரணம் இதுதான்.

நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.

நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.நெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி, அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.

நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.

நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து…. சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்

என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்’ என்று நெல்லிக்கனியைச் சொல்லுவது முற்றும் பொருந்தும். உள்ளங்கை நெல்லிக்கனி’ என்னும் சொல்தொடர் மிகவும் பிரசித்தமானது. நெல்லிக்காயினால் மனித சமூகத்துக்கு எத்தனை விதமான நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பொதுவாகத் தெரிந்ததே.

ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்துக்கு மூலக் காரணம் அவனுடைய உடம்பில் ஓடும் சுத்த ரத்தந்தான். இந்த ரத்தத்தில் அந்நியப் பொருள்கள் கலந்துவிட்டால் ரத்தம் கெட்டுவிடுகிறது. ரத்தம் கெட்டு விட்டல் வியாதிகள் உண்டாகின்றன. அவற்றைத் தடுக்கும் அல்லது எதிர்க்கும் சக்தி சரீரத்தில் குறைந்துவிடுகிறது. இதன் விளைவு, இளமையிலேயே முதுமைதென்படுகிறது. அந்த அந்நியப் பொருளே அமிலம் என்பது மனிதனின் ஆரோக்கியத்துக்குக் கடுமையான எதிரியான யூரிக் அமிலம் இதில் நிறைய இருக்கிறது.

ஆப்பிள், ஆலிவ், நெல்லிக்காய் இந்த மூன்று பொருள்களும் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை அப்புறப்படுத்தும் சக்தி வாய்ந்தவை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நெல்லிக்காய் நம் தேசத்தில் எக்காலத்திலும் எவ்விடத்திலும் ஏதோ ஓர் உருவத்தில் சுலபமாகக் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *