எல்லொரும் சந்தோசமா இருக்காங்க… நான் பு ற் று நோ யோ டு போ ரா டு றேன், ம ன மு டை ந் த சிறுமி.. செவிலியர் செ ய் த நெகிழ்ச்சி செயல்..!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அமெரிக்காவில் இப்போதே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில், கரோலினா மாகானத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கிறிஸ்துமஸையொட்டி அனைவரும் ஜாலியாக உள்ளனர். ஆனால் தான் மருத்துவமனையில் இருப்பதை நினைத்து மிகவும் சோகத்தில் மூழ்கியிருந்தார் குறித்த சிறுமி.

இதை தெரிந்துகொண்ட, மருத்துமனையின் செவிலியர் ஒருவர், கிறிஸ்துமஸ் பாடலுக்கு நடனமாடி, குறித்த சிறுமியை உற்சாகப்படுத்தியுள்ளார்.

சிறுமியின் தந்தை அந்த வீடியோவை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது. பலரும் அந்த செவிலியரை கடவுளின் ஏஞ்சல் என பாராட்டி வருகிறார்கள். போராட்டம் நிறைந்த வாழ்க்கையில், மனமுடைந்து நொறுங்கி போகும் வேளையில் இது போன்றவர்களின் செயல் நிச்சயம் ஊக்கம் அளிக்கும் என்றே சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *