ராசாத்தி சீரியல் நடிகை கீர்த்தியின் கணவர் இந்த நடிகர் தானா..?

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டு வரும் ராசாத்தி சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிகை விசித்திரா நடித்து வருகிறார்.

இந்நிலையில், வில்லியான விசித்திராவின் மகள் கயல் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் கீர்த்தி தன் நடிப்பினால் சட்டென்று பிரபலமடைந்துவிட்டார்.

இந்த சீரியலுக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தாலும், பெரும்பாலானோர் கீர்த்திக்காகவே இந்த சீரியலை பார்ப்பதாகவும் அவரது இன்ஸ்டாகிராமில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா மற்றும் கல்யாண பரிசு போன்ற பல தொடர்களில் வில்லியாக நடித்து வருகிறார். மேலும் இந்த தொடர் மட்டுமின்றி இதற்கு முன்பும் அவர் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இவரது கணவர் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தற்போது அவரது கணவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இவரது கணவர் ஜெய்தனுஷ். இவர் சன் தொலைக்காட்சியில் பிற்பகலில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா என்ற தொடரில் சஞ்சய் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இருவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் அழகிய ஜோடி என புகழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *