விஜய் மறுத்தார் இயக்குநரே நடித்தார் படம் வெள்ளிவிழா-எந்த படம் தெரியுமா!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக மாஸ்ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய் அவர்கள். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெள்ளிவிழாவை கொண்டாடி உள்ளது. குறிப்பாக 1997-98-ம் வருடங்களில் வரிசையாக ஆறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்தவர் விஜய் அவர்கள்.

ஆனாலும், இவர் நடிக்க மறுத்து, மற்றும் மிஸ் செய்த பல படங்கள் தமிழ் சினிமாவில் மெகாஹிட் ஆகியுள்ளது. அப்படி அவர் நடிக்க மறுத்து அல்லது மிஸ் செய்த படங்களில் வேறு நடிகர் நடித்து வெற்றி பெற்ற படங்கள் பல உண்டு. அந்த வகையில் விஜய் நடிக்க மறுத்து அப்படத்தின் இயக்குநரே நடித்த தமிழ் சினிமாவில் யாரும் மறக்க முடியாத படம் ஒன்று உள்ளது. அது எந்த படம் தெரியுமா..

அப்படம்தான் இயக்குநர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படம். இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள்கள் அவர்கள் கடந்து வந்த வாழ்க்கையை நினைவுபடுத்தியது. இப்படத்தில் நடிக்க இயக்குநர் சேரன் அவர்கள் முதலில் அணுகியது நடிகர் விஜய் அவர்களைதானாம்.

ஆனால் அப்போது விஜய் திருமலை, கில்லி ஆகிய படங்களில் நடித்து கொண்டிருந்ததால் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனைகளால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இதன் பிறகு சேரன் இப்படத்தில் நடிக்க பல நடிகர்களை அணுகினாராம். ஆனால் இப்படத்தில் நடிக்க நீ்ண்ட நாட்கள் கால்ஷீட் கேட்டதால் பல நடிகர்கள் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்களாம்.

இறுதியில் தானே இந்த படத்தில் நடித்து இயக்குவது என்று முடிவெடுத்தாராம் சேரன். அவர் எண்ணியபடி படம் வெளிவந்து 175-நாட்கள் ஓடி மெகாஹிட் ஆனதோடு மட்டும் இல்லாமல் சேரனை நல்ல நடிகராகவும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது இப்படம்.

இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த பல படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமைந்ததோடு மட்டும் இல்லாமல் மற்ற இயக்குந்ரகளின் படங்களிலும் நடிக்கும் அளவுக்கு நல்ல நடிகராக வலம் வந்தார் சேரன் அவர்கள்.

2004-ம் ஆண்டு வெளியான இப்படம் இந்த ஆண்டோடு தனது 15-ம் வருடத்தை நிறைவு செய்கிறது என்பது குறிப்பிடதக்கது. இனி இதுபோல் எத்தனை படங்கள் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சங்களில் அழியாத ஆட்டோகிராப்பாக இருக்கும் இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *