க ள் ள க் கா த ல் மோ க ம் ! கட்டிய ம னை வி யை அ டி உ தை ! இவ ரா இப்ப டி!

சினிமாவில் அவ்வபோது ஏற்படும் சர்ச்சையான விஷயங்களை விட சீரியல் உலகில் அதிகம் நிகழ்கிறது. அந்த வகையில், பிரபல சீரியல் நடிகர் மற்றும் நடிகை இடையிலான கள்ளக் காதல் விவகாரமும், அதனால் மற்றொரு சீரியல் நடிகை அடி உதை வாங்கிய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’தேவதையை கண்டேன்’ சீரியலில் நடித்து வரும் ஈஸ்வர் என்பவரும், ’வம்சம்’ சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான நடிகை ஜெயஸ்ரீயும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், ’தேவதையை கண்டேன்’ சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை மகாலஷ்மியுடன் நெருக்கமாக பழகி வருவதோடு, அவரை திருமணம் செய்வதற்காக, நடிகை ஜெயஸ்ரீயிடம் விவாகரத்து கேட்டு ஈஸ்வர் சண்டைபோட்டு வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், ஜெயஸ்ரீயை தினமும் அடித்து சித்ரவதையும் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக நடிகை ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து நடிகர் ஈஸ்வரையும், அவரது அம்மாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு அவரது அம்மாவை ஜாமீனில் விடுவித்த போலீசார், ஈஸ்வரை மட்டும் சிறையில் அடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

பல்வேறு சீரியல்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலமான மகாலஷ்மி ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தைக்கு அம்மாவான நிலையில், தற்போது ஈஸ்வருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *