தினமும் இந்த பழத்தை ஒரு கையளவு சாப்பிடுங்க.. இரத்தசோகையிலிருந்து உடனே விடுபடலாமாம்!

வயது வரம்பிற்கு எல்லா வயதினருக்கும் ஏற்படும் பிரச்னைகளில் இரத்த சோகையும் ஒன்றாகிவிட்டது.

இரும்பு சத்து குறைபாடு ஏற்படும் போது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையானது குறைந்துவிடும். இதனை தான் பெயர் தான் இரத்தசோகை அனீமியா ) என்று அழைக்கப்படுகின்றது.

தேவையற்ற உடற்சோர்வு, பலவீனமாக உணர்தல், தலைவலி, மஞ்சள் மற்றும் வெளிர் நிற தோல் அல்லது கை, கால் வீங்கம், மூச்சுத் திணறல் அல்லது சில நேரங்களில் கனமான சுவாசம் ,எலும்புகள், மார்பு மற்றும் மூட்டுகளில் வல ,பார்வை கோளாறு ,வேகமான, ஒழுங்கற்ற அல்லது அசாதாரண இதய துடிப்பு போன்ற இரத்தசோகையில் அறிகுறிகள் ஆகும்.

அந்தவகையில் இரத்த சோகையிலிருந்து எளதில் விடுபட மருந்துகளை விட பழங்கள் பெரிதும் உதவி புரிகின்றது.

குறிப்பாக தினசரி உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும் இரத்தசோகை ஏற்பட எவ்வித வாய்ப்பும் இருக்காது எனப்படுகின்றது.

ஏனெனில் நாவல் பழத்தில் அதிகப்படியான வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், புரதச்சத்துக்கள், கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம், என மேலும் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.

நாவல் பழம் இரத்த சோகைக்கு மட்டுமின்றி பலவகையான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகின்றது.

தற்போது நாவல் பழம் சாப்பிடுவதனால் கிடைக்கு வேறுநன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

நன்மைகள்

  • நாவல் பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளதால், இரத்தசோகை உள்ளவர்கள் இதனை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இதனால், இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யலாம். இதனால் இரத்தசோகை ஏற்படாது.
  • தினசரி நாவல் பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம். இதனால், எளிதில் எந்த நோயும் உடலை அண்டாது.
  • பெண்கள் மாதவிடாய் காலங்களில் இந்த பழத்தை சாப்பிட வேண்டும். இதனால், அதிகப்படியாக இரத்த போக்கில் இருந்து உடலை தற்காத்துக் கொள்ளலாம்.
  • உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும்
  • ஹீமோகுளோபின் அதிகரிப்பதால் நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியோடு, ஆரோக்கியமாக இருக்கும்.
  • சர்க்கரை நோய்க்கு நாவல் பழம் சிறந்த அருமருந்தாக விளங்குவதால் இதனை எந்த வயதினரும் தயங்காமல் சாப்பிடலாம்.
  • நாவல் பழத்தை தினசரி சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைவதோடு, சிறந்த ஜீரண ஆற்றலையும் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *