இதை யாரிடமும் சொல்ல கூடாது டாக்டர் விஜயசங்கருக்கு அன்புக் கட்டளையிட்ட அஜித்!

பிகில்’ படத்தின் படப்பிடிப்பில் 150 நாள்களுக்கு மேல் வேலை பார்த்த யூனிட் ஆட்களுக்கு ஆளுக்கொரு ‘பிகில்’ பெயர் பதித்த மோதிரத்தைப் பரிசளித்து உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய். ‘படையப்பா’ படத்தில் ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு கொடுத்தது தமிழல்லவா’ என்று ரஜினி பாடுவார். அதேபோல், ‘காப்பான்’ படயூனிட்டில் பணியாற்றிய ஒவ்வொரு டெக்னீஷியன்களுக்கும் தலா ஒரு பவுன் தங்கக் காசு பரிசளித்து உற்சாகமளித்தார் சூர்யா. `நான் பவுன் கொடுத்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது’ என்று சூர்யா அன்புக்கட்டளை போட்ட விவரம் வெளியில் கசிந்துவிட்டது.

தற்போதுள்ள நடுத்தர வயதுள்ள நடிகர்கள் தங்கள் வாரிசுகளை நடிகர்களாக்கி அழகுபார்த்து வருகின்றனர். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் ஹீரோவாக நடித்த ஜெய்சங்கர் உயிரோடு இருந்த காலத்தில் பலமுறை இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தியிருக்கிறார். அவரின் மகன் விஜய் சங்கருக்கு நல்ல அழகான தோற்றம் இருந்தும் மகனை சினிமாவில் நடிக்க அனுமதிக்கவில்லை. ‘என்னோடு சினிமா தொழில் போகட்டும் உன்னை கண்ணொளி தரும் டாக்டராக்கப்போகிறேன்’ எனக் கூறி, அவ்வாறே படிக்க வைத்தார். தற்போது உலகம் முழுக்க சுற்றிவரும் பிரபல கண் டாக்டரான விஜயசங்கருக்கு மிக மிக நெருக்கமான நண்பராக இருக்கிறார் நடிகர் அஜித்.

தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாள்களில் விஜய்சங்கருடன் பொழுதுபோக்குவது அஜித்தின் வழக்கம். ‘உங்களிடம் கண் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் ஆபரேஷன் செய்வதற்கு பணவசதி இல்லாமல் கஷ்டப்பட்டால் அவர்களைத் திருப்பி அனுப்பிவிடாதீர்கள். அந்த நோயாளிக்கு சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். அந்தந்த நோயாளிக்குச் செலவான பணத்தின் தொகையை எனக்கு அனுப்புங்கள். அதற்கான காசோலை உங்களைத் தேடிவரும்.

நடிகர் அஜித்நான்தான் பண உதவி செய்கிறேன் என்பது அந்த நோயாளிக்கு தெரியவே கூடாது, ரகசியம் காக்க வேண்டியது அவசியம்.
இதுகுறித்து என்னிடம் எதுவும் கேட்கவே வேண்டாம். நீங்களாகவே முடிவுசெய்து சிகிச்சை செய்யுங்கள். இன்னொரு முக்கியமான விஷயம், நான்தான் பண உதவி செய்கிறேன் என்பது அந்த நோயாளிக்கு தெரியவே கூடாது. இதில் ரகசியம் காக்கப்பட வேண்டியது அவசியம்’ என்று டாக்டர் விஜயசங்கருக்கு அன்புக் கட்டளையிட்டிருக்கிறாராம் நடிகர் அஜித்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *