இந்த 5 ராசிக்காரங்களும் பேசும் போது தேன் போல இனிக்குமாம்! எதற்கும் இந்த ராசியிடம் எ ச் சரி க்கை யா க இரு ங் கள்?

சிலர் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு பேச்சில் இனிமை இருக்கும். அவர்கள் பேசுவதை வேண்டாம் என்று நம்மால் தடுக்கவே முடியாது.

ஜோதிட சாஸ்திரப்படி 5 ராசியினர், இந்த அளவிற்கு இனிமையாக பேசும் குணம் கொண்டவர்கள். எனினும் இவர்களிடம் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும்.

அந்த ராசிகள் என்னென்ன என்று இப்போது பார்க்கலாம் வாருங்கள்…

Loading...

துலாம்

துலாம் ராசியினர் இயற்கையாகவே மக்களைக் கவரும் தன்மைக் கொண்டவர்கள். அதனால் அனைவரும் இவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும், இவர்களின் பலதரப்பட்ட விஷயங்களில் உள்ள ஆர்வம், இவர்களுடன் பேசுபவரை எளிதில் மயக்கி கலந்துரையாட வைக்கும். எல்லா விஷயத்தைப் பற்றியும் இவர்களுக்கு ஒரு கருத்து இருக்கும். இவர்களின் குணமும் , இடைவிடாத புன்னகையும் இவர்களை இனிமையாக பேசுபவராக வெளிக்காட்டும்.

மிதுனம்

மிதுன ராசியினர் சகஜமாகக் பேசக்கூடியவர்கள். அவர்கள் கிசுகிசு பிரியர்கள். கருத்துகளை உருவாக்கி, கலந்துரையாடலின் தலைப்பை உருவாக்குபவர்கள். மிதுன ராசியினர் ஒரு கலந்துரையாடலை தொடங்கி அதன் முடிவை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றி ஆயிரம் திட்டம் வைத்திருப்பார்கள். கலந்துரையாட எல்லோரையும் அவர் அழைக்கவில்லை என்றாலும், எல்லோரிடமும் இவர் நட்பு பாராட்டவில்லை என்றாலும், இவருடைய இனிமையான பேச்சு சிலரை இவருடன் ஒட்டிக் கொள்ள வைக்கும்.

விருச்சகம்

விருச்சக ராசியினர் மிகுந்த சுய மரியாதையோடு இருப்பதால், மக்கள் இவரை நம்பியே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகும். விரும்பிய முடிவுகளைப் பெற விவாதங்களையும் அவர்கள் கையில் எடுக்கலாம்.

ஆனால் ஆழ்ந்த விவாதங்களை தவிர்க்க முயற்சிப்பார்கள். காரணம் சில விவாதங்களின்போது பொய் பேச நேரலாம். ஆகவே பொய் பேசுவது எந்த நேரத்திலும் பாதுகாப்பற்றது என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவர்களுக்கு ஓரளவிற்கு பொறுமை உண்டு. அமைதியானவர்கள் விருச்சிக ராசியினர். உதவி மனப்பான்மை கொண்டவர்கள். மற்றவர்கள் கூறுவதை கேட்டுக் கொள்பவர்கள். இந்த இனிமையான குணங்கள் இவர்கள்பால் மற்றவர்களை ஈர்க்கும்.

கும்ப ராசி

இயற்கையாகவே உதவும் மனப்பான்மைக் கொண்டவர்கள் கும்ப ராசியினர். மற்றவர்கள் பேசுவதை அதிகம் கவனிக்கும் தன்மைக் கொண்டவர்கள் இவர்கள். தங்களுடைய உணர்வுகளையும் உணர்சிகளையும் அதிகம் வெளிக்காட்டாதவர்கள். மற்றவர்கள் இவர்களிடம் பேசும்போது இவர்கள் முகத்தில் தென்படும் அமைதி, பேசுபவர்களுக்கு ஒரு வித சௌகரியத்தை உண்டாக்கும். சில கும்ப ராசியினர், தங்கள் முயற்சியில் தோல்வி அடைவார்கள் என்று தெரிந்தும், சில நேரம் மற்றவரை மகிழ்விக்க முயற்சிப்பார்கள்.

தனுசு ராசி

நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள் தனுசு ராசியினர். மிகவும் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். மக்களை சந்திப்பதை அதிகம் விரும்புவார்கள். முகம் தெரியாதவர்கள் கூட இவர்களிடம் பழக வேண்டும் என்று விரும்புவார்கள்.

பேச்சால் பெண்கள் கவனத்தை எவ்வாறு ஈர்க்க வேண்டும் என்ற வித்தையை அறிந்திருப்பார்கள். இருப்பினும், சில நேரம் வார்த்தை தவறி, தேவையற்ற, சரியில்லாத வார்த்தைகளை பயன்படுத்தலாம். அதுவரை, இவர்களைப் போல் இனிமையாக பேசுபவர் வேறு யாராகவும் இருக்க முடியாது. இவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாகவே இருங்கள்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *