ஏழே நாளில் நரை முடி நிரந்தரமாக கருப்பாகும் அதிசயம்

தலைமுடி நிறம் மாறுவது என்பது முன்பெல்லாம் முதுமை காலங்களில் ஏற்பட்டு கொண்டிருந்தது. இப்போதோ இளமையிலேயே உடலில் சத்து குறைபாடுகள் காரணமாக நரைக்க ஆரம்பித்து விட்டது.

இதற்கான காரணங்களை கண்டறிந்தோம் என்றால் முறையான உணவு பழக்கமின்மை மற்றும் சத்து குறைபாடுகள், அதிகமான முடி உதிர்தலால் தலை வழுக்கை ஏற்படுதல் போன்றவை நடக்கின்றன.

இதனால் மன உளைச்சல், கவலை, யாரோடும் தொடர்பு கொள்ளாமை போன்ற விஷயங்கள் நடை பெறுகின்றன.மேற்கண்ட அறிகுறிகள் இருப்பின் முடியை பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.ஆகவே அத்தகைய துன்பங்களை கொடுக்கும் நரைமுடி நமக்கு வராமல் தடுக்க ஒரு முக்கியமான தைலம் ஒன்றை தயாரிக்க போகிறோம்.இந்த எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் நிச்சயம் நரை முடி பிரச்னையில் இருந்து நீங்கள் விடுபடலாம்.

Loading...

தேவையான பொருட்கள்

செம்பருத்தி இலை ஒரு கைப்பிடி , மருதாணி இலை ஒரு கைப்பிடி , கருவேப்பிலை இலை ஒரு கைப்பிடி , வெந்தய இலை ஒரு கைப்பிடி , கரிசலாங்கண்ணி இலை ஒரு கைப்பிடி , நெல்லிக்காய் கால் கிலோ , தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

செய்முறை
நெல்லிக்காய்களை சிறு துண்டுகளாக்கி விதை நீக்கி அரிந்து வைத்து கொள்ளவும். அத்தனை இலை வகைகளையும் தண்ணீர் விடாமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணையை ஊற்றி பொடியாக நறுக்கிய நெல்லிக்காய் மாற்றும் அரைத்து வைத்துள்ள இலைகளை அதில் கலந்து, சிறிய தீயில் நிதானமாக வேக விடவும்.நன்கு காய்ந்த பின் கரும்பச்சை நிறத்தில் எண்ணெயின் நிறம் மாறி வரும், அப்போது அடுப்பை நிறுத்தி விடவும்.நன்கு ஆறவைத்த பிறகு இந்த எண்ணையை வடிகட்டி ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவும்.

வழக்கமான முறையில் இந்த எண்ணெயை நீங்கள் தலையில் தேய்த்து கொள்ளலாம். அலுவலகம் செல்பவர்கள் குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு இந்த எண்ணெயினை மயிக்கால்களில் படும்படி தடவி பின் தலைக்கு ஷாம்பூ அல்லது சிகைக்காய் போட்டு குளித்துக் கொள்ளவும்.

ஆண்களும் இந்த எண்ணையை பயன்படுத்தலாம், மூன்று வாரங்களில் உங்கள் நரைமுடியின் நிறம் மாற தொடங்கும்.புதிதாக உருவாகும் முடி கருமையாக உருவாவதை கண்கூடாக உங்களால் பார்க்க முடியும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *