நாய் கடித்து விட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்? இதோ சில எளிய முறை

நாம் ஆசையாக வளர்க்கும் நாய் அல்லது ரோட்டு நாய் கீறிலோ அல்லது கடிக்கவோ செய்துவிட்டால், உடனே அதற்கு சரியான முதலுதவி செய்ய வேண்டும்.ஏனெனில் நாயினுடைய பற்கள் உங்களுடைய தோல் திசுக்களைக் கவ்வியிருந்தாலும் மிகச்சிறியதாக பல் பட்டிருந்தாலும் அது ஆபத்து தான்.

நாய் கடிக்கு உடனடியாக சில மருத்துவ சிகிச்சைகள் செய்வது மிக அவசியமானது ஆகும்.அந்தவகையில் மருத்துவமனைக்குச் செல்லும் முன் நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டால் இலகுவாக இருக்கும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

நாய் கடித்த காயமோ அதன் தடமோ உள்ள இடத்தில், விரல்களால் வைத்து மெல்ல அழுத்துங்கள்.நாய் கடித்த இடத்தை மென்மையான சோப்பும் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டோ கழுவுங்கள்.நாய் கடித்த இடத்திலிருந்து கட்டாயம் ரத்தம் நிண நீருடன் சேர்ந்து வடியும். சுத்தமான துணியைக் கொண்டு வடியும் ரத்தத்தைத் துடைத்து எடுங்கள்.

Loading...

காயமுள்ள இடத்தை டெட்டால் கொண்டு, சுத்தமான துணியால் துடைத்துவிட்டு, அந்த இடத்தில் ஆன்டி- பயாடிக் க்ரீம் போட்டு விடுங்கள்.ஆன்டி பயாடிக் க்ரீம் அப்ளை செய்தவுடன் அதன்மேல் சிறிது காட்டனை வைத்து, மேலே மெல்லியதாக ஒரு கட்டு போடுங்கள்.

குறைந்தது இரண்டு மணி நேரத்து ஒருமுறையாவது,அந்த கட்டை பிரித்து, மீண்டும் துடைத்துவிட்டு வேறு கட்டு போடுங்கள்.கடித்த இடத்தில் வீக்கம், சிவந்து இருப்பது, வலி, அதனால் ஏற்படும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *