200% இனி ஒரு கொசு கூட உள்ளே வராது அப்படியே வந்தாலும் மயங்கிவிழுந்துடும்

கொசுக்கள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அது நம்மை கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் பெரிதாக இருக்கும். அப்படி பட்ட கொசுக்களை விரட்ட நமது வீட்டில் இருக்கும் பொருட்களே போதும் எலுமிச்சை, கிராம்பு மட்டும் போதும் உங்கள் வீட்டுக் கொசுக்களை ஓட ஓட விரட்டுவதற்கு

தேங்காய் நார்கள் நம்மூர் கடைகளில் சுலபமாக கிடைக்கின்றன. அதை வாங்கி வந்து மாலை நேரங்களில் அதை எரித்து அதன் புகையை எல்லா அறைகளுக்கும் காண்பித்துவிட்டு, சிறிது நேரம் கழித்து பாருங்கள் ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது.

கற்பூரத்தைக் கொண்டும் கொசுக்களை விரட்டலாம். சல்பர் இருக்குமிடத்தில் ஒரு கொசு கூட இருக்காது. கற்பூரம் சல்பரினால் ஆனாது. ஆனால் கற்பூரம் சுலபமாக காற்றில் உடனே கரைந்துவிடும். கற்பூரத்தை தட்டில் வைத்து கொளுத்தி விட்டு வீடு முழுவதும் அதன் புகையைக் காட்டினாலும் கொசுக்கள் ஓடிவிடும்.

Loading...

வீட்டின் ஜன்னல் பகுதிகளில் வெள்ளைப்பூண்டை நசுக்கிப் போட்டு வைத்தாலும் ஒரு கொசுக்கள் கூட உள்ளே வராது.பிளீச்சிங் பவுடரை தண்ணீரில் கலந்து கொசு அதிகமாக உருவாகும் இடங்களில் தெளித்துவிட வேண்டும். இதனால் கொசுக்கள் உருவாகுவதை தடுக்கலாம்.

வேப்பிலை அல்லது நொச்சி இலைகளை நெருப்பில் போட்டு வீடு முழுவதும் புகை போட்டால் கொசுக்கள் வீட்டுப்பக்கமே வராது.அதேபோல் எலுமிச்சை,ஆரஞ்சு, சாத்துக்குடி தோலை உலர்த்தி யூக்கலிப்டஸ் இலையுடன் சேர்த்து வீட்டில் புகை போடுங்கள். இதுவும் நல்ல பலன் தரும்.

இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது தினமும் ஒரு விஷயத்தையோ வீட்டில் செய்து வர வீட்டில் கொசு பிரச்னையைத் தீர்த்தட்டுவிடலாம்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *