கேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இது தான்! தமிழர்களே இனி இதை தூக்கி வீசாதீர்கள்

பெண்களின் அழகிற்கு அரிசி தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த அரிசி தண்ணீரில் ஏராளமான ஊட்டச்சத்து அளவுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், போன்றவை அடங்கியுள்ளன.

இந்த பழக்கம் பண்டைய காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் பிறந்த குழந்தையை தமிழர்கள் இந்த அரிசி தண்ணீர் கொண்டு தான் குளிப்பாட்டுவார்கள்.

முகம் அழகாக தூய்மையாக இருக்க இப்பவும் ஆயிரக்கணக்கான கேரளத்து பெண்கள் இந்த அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழர்கள் மறந்தது வேதனைக்குறிய விடயமே.

Loading...

அரிசி கழுவிய தண்ணீருடன் சில பொருட்களையும் கலந்து பயன்படுத்தலாம்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் தேன் , 1 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.வாரத்திற்கு என்ற முறையில் இதை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் எல்லாம் மறைந்து மாசு மருவற்ற முகத்தை பெறலாம்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் கற்றாழை ஜெல் 2 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீ ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவவும்.

பிறகு 30 நிமிடங்கள் கழித்து சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.இப்படி அரிசி தண்ணீரை பயன்படுத்தும் போது மிருதுவான மென்மையான சருமத்தை பெறலாம்.வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *