மாரடைப்பை தடுக்கும் பேரீச்சையை நோன்பு முடிக்குந் தருவாயில் சாப்பிட காரணம் இதுதான்!

பேரீச்சையில் நிலப் பேரீச்சை, பிண்டப் பேரீச்சை, கோஸ்தனகர்ஜூரம் (பசுவின் மடிக் காம்புகள் போன்றது) என மூவகைள் உண்டு. இவை பெரும்பாலும் அரபு நாடுகளில் விளைவன ஆகும். மூன்று வகை

பேரீச்சைகளும் சுவையிலும் மருத்துவ குணத்திலும் ஏறத்தாழ ஒரே தன்மையைப் பெற்றிருக்கும்.இனிமையோடு குளுமையும் எண்ணெய்ப்பசை கொண்டதாகவும் இருக்கும்.பேரீச்சையின் பழச்சதை இருமலைத் தணிக்க கூடியது. நெஞ்சகச் சளியைக் கரைத்து வெளித்தள்ளக் கூடியது. மலத்தை இளக்குவது, சிறுநீரைப் பெருக்கக் கூடியது, உடலுக்கு உரமாவது, சத்தூட்டமுள்ளது.

நோன்பு முடிக்குந் தருவாயில் பேரீச்சை:-

Loading...

பேரீச்சையில் ப்ரக்டோஸ் மற்றும் டெக்ஸ்ரோஸ், என்னும் இனிப்பு சத்துக்கள் மிகுந்து இருப்பதாலும் 100 கிராம் பேரீச்சையில் 277 கலோரி எரிசக்தி இருப்பதாலும் உண்ட உடன் உடலுக்கு உற்சாகம் தருவதாக விளங்குகின்றது. இதனாலேயே நோன்பு முடிக்குந் தருவாயில் இதை உணவாகக் கொள்வது பண்டை நாள்முதல் பழக்கத்தில் இருந்து வருகின்றது.

பேரீச்சையில் உணவாகும் நார்ச்சத்து மிகுதியாக உள்ளதால் உணவுப் பாதையில் கெட்ட கொழுப்புச் சத்தான எல்.டி.எல் எனப்படும் கொழுப்பு உறிஞ்சப்படுவது தவிர்க்கப்படுகின்றது. மேலும் நல்லதோர் மல மிளக்கியாக இருந்து ஆசன வாய்க்குள் ஏற்படும் புற்று நோயைத் தடுப்பதாக உதவுகின்றது.

பேரீச்சையில் டேனின்ஸ் எனப்படும் வேதிப்பொருள் மிகுந்துள்ளது. இது தொற்று நோய்களைத் தவிர்க்க உதவுவது, வீக்கத்தைக் கரைக்கக் கூடியது, ரத்தக் கசிவைத் தடுக்கக் கூடியது.

பேரீச்சையில் உள்ள விட்டமின் ஏ சத்து கண்பார்வையைக் கூர்மைப்படுத்த வல்லது. மேலும் மென் திசுக்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. மேலும் விட்டமின் ஏ சத்து நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு தடுப்பாக இருந்து உதவுகிறது..

பேரீச்சையில் உள்ள பீட்டா கெரோட்டின், லுயூடின், சியாசேந்த்தின் ஆகிய சத்துப் பொருள்கள் திசுக்களைப் பாதுகாப்பதோடு பெருங்குடல், புரோஸ்டேட், மார்பகம், கருப்பை, நுரையீரல், கணையம் ஆகிய பகுதிகளில் புற்று நோய் வராத வண்ணம் தடுப்பு மருந்தாக உதவும்.

பேரீச்சையில் உள்ள சியாசேந்தின் என்னும் உணவாகும். விட்டமின் ஏ சத்து விழித்திரைகளுக்கு பலம் தருவதாக அமைகிறது. கண்களுக்கு சோர்வைப் போக்குவதுடன் தேவையற்ற வெளிச்சத்தைக் கட்டுப்படுத்தும் பணிக்கு உதவியாக விளங்குகிறது. பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து மிகுதியாக உள்ளது. சுமார் 100 கிராம் பேரீச்சையில் 0.90 மி.கி. அளவுக்கு இரும்புச் சத்து அடங்கி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சிவப்பு ரத்த அணுக்களின் ஒரு பகுதியான ஹிமோ குளோபின் உற்பத்திக்கு இந்த இரும்புச்சத்து உறுதுணையாக உள்ளது. இந்த ஹீமோ குளோபின்கள் தான் ரத்தம் பிராண வாயுவை எடுத்துச் செல்லும் பணிக்கு அடிப்படையாக அமைகிறது.

பேரீச்சையில் தாது உப்புக்களான கால்சியம், மேங்கனீசு, செம்பு மற்றும் மெக்னீசியம் ஆகியன மிகுதியாக உள்ளன. இதில் கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்து பற்கள் மற்றும் எலும்புகள் பலமுடன் இருக்கத் துணை செய்கின்றது. தசைகள் சுருங்கி விரியும் பணிக்கு கால்சியம் சத்து தேவைப்படுகின்றது. மேலும் கால்சியம் சத்து ரத்தம் உறைதலுக்கும், நரம்புகளின் ஊடான உணர்வு ஓட்டத்துக்கும் மிகவும் உதவியாக இருக்கின்றது. பேரீச்சை தரும் “மாங்கனீசு” சத்து உடலுக்கு புத்துணர்வு தருவதாக அமைகின்றது. செம்புச் சத்து ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாக உதவுகிறது. மெக்னீசியம் எலும்பு வளர்ச்சிக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் துணையாகின்றது.

பேரீச்சையில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான விட்டமின் பி.காம்ப்ளெக்ஸ், பைரிடாக்சின், விட்டமின் கே நியாசின், பேண்டோதெனிக் அமிலம், ரிபோஃப்ளேவின் ஆகிய வேதிப் பொருள்களும் மிகுதியாக உள்ளன.

பேரீச்சம் பழம் வாயில் அதிகமாக நீரூரச் செய்கின்ற பித்தம், மயக்கத்தைத் தடுகின்ற காய்ச்சல், நீர்க் கோர்வை, நாவறட்சி, ரத்த பித்தம், நீரிழிவு என்கிற மதுமேகம், பசியின்மை, சுவையின்மை, மலக்கட்டு ஆகிய குற்றங்களைக் கண்டிக்கும்.

பேரீச்சங்காயை கர்ச்சூர்க்காய் என்று கடைகளில் விற்பர். கர்ச்சூர்க்காய் உமிழ் நீர்ப்பெருக்கையும், நீரிழிவையும் வயிற்றுப் போக்கையும் தணிக்க வல்லது. பசியைத் தூண்டக் கூடியது. பேரீச்சம் பழத்தைவிட பேரீச்சங்காய்களில் அதிக சத்துக்கள் இருப்பதாக மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இரும்புச்சத்து இதில் அதிகமாக இருக்கின்றது. எனவே ரத்த சோகைக்கு உள்ளானவர்கள் அன்றாடம் மூன்று அல்லது நான்கு பேரீச்சங்காய்களை பாலிலிட்டு வேகவைத்து மேலும் சிறிது பால் சேர்த்து அன்றாடம் இரவு நேரத்தில் பருகி வருவதால் ரத்த சோகை இல்லாமல் போகும். மலச்சிக்கலும் மறைந்து போகும்.

பேரீச்சையின் கொட்டையை எடுத்து சுத்தமான பாலிலோ அல்லது நீரிலோ இழைத்து கண்களின் மேல் மை போலத் தீட்டிவர கண்களின் சிவப்பு மாறும், கண்களில் பூவிழுதல் என்கிற துன்பம் போகும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *