ஆத்தி நடிகை அஞ்சலியா இது? போதி தர்மர் போல் போஸ் கொடுத்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த அஞ்சலி..!

தமிழ் சினிமாவில் சில முகங்களை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்கள். அந்த கதாபாத்திரத்தை நடிகையாக மட்டும் பார்த்திடாமல் அவர்களை தங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரமாகவே எடுத்துக் கொள்வார்கள்.அந்த வகையில் தங்கள் வாழ்க்கையோடு பயணிக்கும் காதலியாகவும், தங்கையாகவும், தோழியாகவும் நிஜமாகவே உணர வைத்த கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் நடிகை அஞ்சலி.

அழகான தமிழ் முகம். யதார்த்தமான நடிப்பு. அட யாருடா இது பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரியே இருக்காங்கனு தனது முதல் படத்திலியே கேட்க வைத்தவர் தான் நடிகை அஞ்சலி. புதுமுக நடிகர்கள் தொடங்கி முன்னணி நடிகர்கள் வரை பலருடன் நடித்துள்ள நடிகை அஞ்சலி தமிழ்த்திரையுலகில் அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட நடிகைகளில் ஒருவர் . கொலுக் மொலுக்கென இருக்கும் இவரது தோற்றத்தின் மீது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பெரிய ஈர்ப்பு உண்டு.

ஜீவா நடித்து ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படம் தான் அஞ்சலியின் அறிமுகப்படம். அங்காடித்தெரு படத்தில் அஞ்சலியின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. அதேபோல் கலகலப்பு உள்பட இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. ஆனால் அஞ்சலிக்கு சமீபகாலமாக தயாரிப்பாளருடன் சண்டை, சித்தியுடம் பிரச்னை, பிரபல நடிகருடன் காதல் என தொடர் சர்ச்சையில் சிக்கினார்.

Loading...

எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது நடிகர் ஜெய்க்கும், இவருக்கும் காதல் என கிசு,கிசு கிளம்பியது. சோசியல் மீடியாக்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை அஞ்சலி, ஜிம், யோகா கிளாஸ் என உடலையும், மனதையும் எப்போதும் பிரஸ்ஸாக வைத்திருப்பார்.

இந்நிலையில் இப்போது போதி தர்மர் போல் போஸ் ஒன்றைக் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் அஞ்சலி.அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *